ஈரோடு வி.வி.சி.ஆர் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம், இவருக்கு 21 வயதில் கிருஷ்ணா என்ற மகன் உள்ளார். கிருஷ்ணா ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கூலி வேலை செய்து வந்துள்ளார்.அப்போது கிருஷ்ணாவிற்கு ஈரோடை சேர்ந்த 17 வயது சிறுமி மீது காதல் ஏற்பட்டுள்ளது.
பின்னர் இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர். சிறிது நாட்கள் களைத்து திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்த கிருஷ்ணா சிறுமியை பல்வேறு இடங்களுக்கு அவ்வப்போது அழைத்து சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
வழக்கம் போல் கடந்த (மே 02) ஈரோடு பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள ஒரு பயன்பாடற்ற கட்டிடத்திற்கு கிருஷ்ணா சிறுமியை அழைத்து சென்றுள்ளார்.பின்னர் அவ்விடத்திற்கு வந்த கிருஷ்ணாவின் நண்பர்களான ஈரோடு மணல்மேடு பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (25), சாஸ்திரி நகர் கல்யாணசுந்தரம் வீதியை சேர்ந்த மணிகண்டன் (25), அவல்பூந்துறை பாரதி வீதியை சேர்ந்த குகன் (23) ஆகிய 3 பேரும் அச்சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்திருக்கின்றனர்.
இவர்களிடமிருந்து தப்பித்து வீட்டிற்கு சென்று சிறுமி இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார் இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் சிறுமியை கொடுமை செய்த நான்கு பேரையும் குறித்து போலீசில் புகாரளித்துள்ளார்.வழக்கை விசாரித்த காவல்துறையினர் நால்வரின் மீதும் போக்சோ வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்