“பொது இடத்தில் நடந்த அரிவாள் வெட்டு” - நான்கு வருட தகாத உறவு.. பின் தொடர்ந்து சென்று கள்ளக் காதலனை வெட்டிய கணவன்!

பகலில் போது இடத்தில வைத்து ஒருவர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே
venkatesan
venkatesan
Published on
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டம் வரட்டனப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் நாடக கலைஞர் 44 வயதான வெங்கடேசன். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் இருக்கும்  நிலையில் அதே பகுதியை சேர்ந்த நரசிம்மப்பா என்பவரின் மனைவியுடன் திருமணத்திற்கு மீறிய உறவு இருந்து வந்துள்ளது. இது குறித்து நரசிம்மப்பா பல முறை கண்டித்தும் இருவரும் அவர்களின் உறவை கைவிடாததாக சொல்லப்படுகிறது.

கடந்த நான்கு ஆண்டுகளாகவே வெங்கடேசனுக்கும் நரசிம்மப்பாவின் மனைவிக்கும் தகாத உறவு இருந்துள்ளது. பலமுறை கண்டித்தும் இருவரும் திருந்தாத நிலையில் நரசிம்மப்பா வெங்கடேசனின் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில் நரசிம்மப்பாவின் மனைவி இன்று வெளியே வேலையாக செல்வதை கூறிவிட்டு வெங்கடேசனுடன் ஊர் சுற்றியுள்ளார்.

இதனை அறிந்த நரசிம்மப்பா வெங்கடேசனை கொலை செய்ய முடிவு செய்து அவர்களை தேடியுள்ளார். இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகே வெங்கடேசனை  பார்த்ததும் பின் தொடர்ந்து மறைத்து வைத்திருந்த அறிவாளை எடுத்து முகத்திலும் கழுத்திலும் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் வெங்கடேசன் பலத்த காயமடைந்து துடித்துள்ளார்.

இதனை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வெங்கடேசனை மீட்டு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைத்துள்ளனர். மருத்துவமனையில் வெங்கடேசனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து வெங்கடேசனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் தப்பி சென்ற நரசிம்மப்பாவை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பகலில் போது இடத்தில வைத்து ஒருவர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com