
திரிபுரா மாநிலத்தை சேர்ந்தவர் 25 வயதான இளம் பெண் ரேணுகா. இவர் அதே பகுதியை சேர்ந்த 28 வயதான சரிபுலா என்ற இளைஞரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். அதே சமயம் ரேணுகாவின் மாமன் மகனான தீபக்கர் என்பவரும் ரேணுகாவை காதலித்து வந்துள்ளார்.
ரேணுகாவும் சரிபுலாவும் காதலிப்பது தெரிந்தும் தீபக்கர் ரேணுகாவிடம் தொடர்ந்து பழகி வந்துள்ளார். மாமன் மகனென்று ரேணுகா தீபக்கரிடம் அக்கறையாக பேசியதை, தவறாக புரிந்து கொண்ட தீபக்கர் சரிபுலா இல்லையென்றால் ரேணுகா தன்னை திருமணம் செய்து கொள்வர் என நினைத்த சரிபுலாவை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார்.
அதன்படி சரிபுலாவிடம் நல்லவர் போல் பேசிய தீபக்கர் “நீங்கள் எங்கள் வீட்டு பெண்ணை திருமணம் செய்து கொள்ள போகிறீர்கள். உங்களுக்கு ஒரு பரிசு கொடுக்க விரும்புகிறேன். எங்கள் வீட்டிற்கு வாங்க” என அழைத்துள்ளார். இதை எல்லாம் உண்மை என நம்பிய சரிபுலா, தீபக்கர் வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டிற்கு வந்த சரிபுலாவை தீபக்கர் தலையில் கம்பியால் அடித்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
அப்போது தீடிரென வீட்டிற்கு வந்த தீபக்கரின் குடும்பத்தார் அவருக்கு அறிவுரை கூறாமல் மகன் செய்த கொலையை மறைக்க எண்ணியுள்ளனர். எனவே அனைவரும் சேர்ந்து சரிபுலாவின் உடலை அருகில் இருந்த தங்களது ஐஸ் கடைக்கு எடுத்துச் சென்று பிரீஜரில் போட்டு மறைத்து வைத்துள்ளனர். இரண்டு மூன்று நாட்களுக்கு பிறகு உடலை எங்காவது எடுத்து சென்று அழித்துவிடும் என வழக்கமான வேலைகளை பார்க்க தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் தனது மகனை காணவில்லை என சரிபுலாவின் பெற்றோர்கள் காவல் துறையில் புகாரளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் சரிபுலாவை தேடத் தொடங்கிய போலீசார் முதலில் அவரது நண்பர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நண்பர்கள் அளித்த தகவலின் படி ரேணுகாவிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார் அவரது போனை பறிமுதல் செய்துள்ளனர்.
அதில் தீபக்கர் ரேணுகாவிற்கு அனுப்பிய லவ் மெசேஜ்களை வைத்து, தீபக்கர் மீது சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் தீபக்கர், சரிபுலாவை கொலை செய்ததையும் உடலை மறைத்து வைத்திருப்பதையும் இதற்கு தனது குடும்பம் அவருக்கு உதவி செய்ததையும் ஒப்புக்கொண்டுள்ளார்.
தீபக்கரின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் சரிபுலாவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டு, கொலை செய்த தீபக்கர் அவருக்கு உதவியாக இருந்த குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை என மொத்தம் ஆறு பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.