
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மோட்டு காடு கிராமத்தை சேர்ந்த மொய்யாகவுண்டர் என்பவரின் மகன் 36 வயதுடைய சிவக்குமார். எலக்ட்ரிஷியன் வேலை செய்து வரும் இவருக்கு மாராயி என்பவருடன் திருமணமாகி ஒரு மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர். சிவகுமார் கடந்த (செப் 28) ஆம் தேதி தனது அப்பாச்சி பைக்கில் குப்பனூரில் உள்ள சந்தைக்கு சென்று வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் வாங்கிக்கொண்டு திரும்பி வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது இரவு 7.30 மணியளவில் வாழவந்தி ஆரம்பம் சுகாதாரம் நிலையம் அருகே மலைப்பாதை ஓரத்தில் சிவக்குமார் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். அதைப் பார்த்த கிராம மக்கள் சிலர் சிவகுமாரை அருகில் உள்ள வாழவந்தி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என்று கூறியுள்ளார்.
தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த சிவகுமார் உறவினர்கள் சிவகுமார் வந்த பைக்கில் விபத்து ஏற்பட்டதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லாமல் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்ததால் சிவகுமார் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி மருத்துவமனையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து மருத்துவமனை ஊழியர்கள் ஏற்காடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஏற்காடு காவல் ஆய்வாளர் வாசுகி விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு பின்னர் மருத்துவமனையில் இருந்த சிவகுமார் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சிவகுமார் மரணம் குறித்து விசாரணையை தொடங்கினர். சம்பவம் நடந்த இடத்தில் உடைந்து கிடந்த ஹெல்மெட் ஒன்றையும் அந்த இடத்தில் சாலையோரத்தில் உள்ள 5 அடி பள்ளத்தில் கிடந்த இரும்பு பைப் ஒன்றையும் கைப்பற்றிய போலீசார் இது கொலையா? அல்லது விபத்தா? என இரண்டு கோணங்களில் விசாரணையை தொடங்கினர்.
அதைத் தொடர்ந்து ஏற்காடு போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் சிவகுமார் மனைவி மாராயி ஏற்காடு மருதயங்காடு கிராமத்தை சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் 24 வயதுடைய மகன் சந்தோஷ் என்பவருடன் கடந்த இரண்டரை ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு வைத்திருந்தது சிவகுமாருக்கு தெரிய வந்துள்ளது. மாராயி சந்தோசுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால் கணவன் மனைவி இருவர் இடையே அடிக்கடி பிரச்சனைகள் வந்துள்ளது.
மேலும் மாராயி கள்ள தொடர்பு பிரச்சனை காவல் நிலையம் வரை சென்று காவல் நிலையத்தில் மாராயி இதற்கு மேல் இது போல செய்ய மாட்டேன் என்று சிவகுமாரிடம் மன்னிப்பு கேட்டதை அடுத்து இருவரும் சேர்ந்து வாழ்ந்துள்ளனர். பின்னர் கடந்த ஒரு மாதத்திற்கு முன் மாராயி மீண்டும் சந்தோஷுடன் பேசி வந்துள்ளார்.
எனவே சந்தோஷ் சிவகுமார் வீட்டில் இல்லாத போது அவரது வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். அதையறிந்த சிவகுமார் சந்தோசை பிடித்து கம்பத்தில் கட்டி வைத்துள்ளார். பின்னர் ஊர் பெரியவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மீண்டும் சிவகுமார் தனது பிள்ளைகளின் வாழ்க்கையை நினைத்து தனது மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் சிவக்குமார் மனைவியை விசாரணை செய்ததில் அவர் முன்னுக்கு பின்னான பதில்களை கூறியதால் அவர் மீது சந்தேகம் வரவே அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர். அப்போது சந்தோஷ் மற்றும் மாராயி இருவரின் கள்ளத்தொடர்புக்கு சிவக்குமார் இடையூறாக இருப்பதாக அவரை கொலை செய்ய மாராயி மற்றும் சந்தோஷ் திட்டம் தீட்டியுள்ளனர்.
அதன்படி சந்தோஷ் மற்றும் அவரது நண்பர்களான கீரைக்காடு புத்தூர் கிராமத்தை சேர்ந்த சின்ன கவுண்டர் மகன் அண்ணாமலை,24. வாழவந்தி கிராமத்தை சேர்ந்த சந்திரன் மகன் தினேஷ் ஆகியோர் சிவகுமாரை பின் தொடர்ந்து வாழவந்தி ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் உள்ள மலைப்பாதையில் வழிமறித்து இரும்பு ராடால் தலையில் அடித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து ஓடியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.