

மகாராஷ்டிரா மாநிலம், சோம்நாத் மாவட்டம் பத்னாபூர் பகுதியை சேர்ந்தவர் 28 வயதுடைய பரமேஸ்வர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 25 வயதுடைய மனிஷா என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில் பரமேஸ்வர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது கடைசி தம்பியான தியானேஸ்வர் அதே தெருவில் வசித்து வருவதால் அண்ணன் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவதை வழக்கமாக வைத்திருந்தார்.
அதுபோல செல்லும் போது அண்ணி மனிஷாவுடன் தியானேஸ்வருக்கு பழக்கம் ஏற்பட்டு இந்த பழக்கமானது நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி வீட்டில் பரமேஸ்வர் இல்லாத போது இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்து வந்துள்ளனர். மேலும் கணவர் வீட்டில் இருக்கும் போதும், மனிஷா தொடர்ந்து தியானேஸ்வரிடம் போனில் பேசி வந்திருக்கிறார். இதன் காரணமாக கணவருடன் பேசுவதை தவிர்த்து வந்ததாகவும், அதேபோல் குழந்தைகளை சரிவர கவனிக்காமல் இருந்து வந்திருக்கிறார்.
இதனால் மனைவி மீது சந்தேகமடைந்த பரமேஸ்வர் அவரது செல்போனை எடுத்து பார்த்தபோது அதில் மனிஷா தியானேஸ்வருடன் செய்த மெசேஜ் பார்த்து அதிர்ச்சி அடைந்து இது குறித்து மனிஷாவிடம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பரமேஸ்வர் மனிஷாவை அடித்து துன்புறுத்தியதாக சொல்லப்படுகிறது. மேலும் அவரது தம்பியான தியானேஸ்வரை அழைத்து தனது மனைவியுடன் பழகுவதை நிறுத்திக் கொள்ளுமாறு கண்டித்துள்ளார்.
இருப்பினும் இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் பரமேஸ்வரை கொல்ல திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி கடந்த மாதம் 15 ஆம் தேதி இரவு பரமேஸ்வர் வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது அவரது கள்ளக்காதலனை வரவழைத்து மனிஷா கணவரை கொன்று சடலத்தை மூட்டை கட்டி அருகிலிருந்த அணையில் மூட்டையை வீசியுள்ளனர். பின்னர் எதுவும் தெரியாதது போல கணவரை காணவில்லை என காவல் நிலையத்தில் புகாரளித்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் பரமேஸ்வர் உடல் இருந்த மூட்டை தண்ணீரில் மிதந்து உள்ளது.
அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தியபோது அது காணாமல் போன பரமேஸ்வர் உடல் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரது மனைவியிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில் மனைவி கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. எனவே போலீசார் மனிஷா மற்றும் தியானேஸ்வர் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.