திருவிழாவில் 200ரூ கள்ளநோட்டுகள் புழக்கம்; அச்சடித்தது யார் தெரியுமா?

திருவிழாவில் 200ரூ கள்ளநோட்டுகள் புழக்கம்; அச்சடித்தது யார் தெரியுமா?
Published on
Updated on
1 min read

நாகப்பட்டினம்: ரூ200 கள்ளநோட்டுகளை அச்சடித்து திருவிழாவில் புழங்கவிட்ட மாணவர்கள்!

நாகப்பட்டினம்  வேதாரண்யம் அடுத்துள்ள தென்புலம் பகுதியில் அம்மன் கோவில் ஒன்றில் திருவிழா சீரும் சிறப்புமாக நடந்து வந்துள்ளது. திருவிழாவில், ஊர்மக்கள் அனைவரும் கலந்துக்கொண்டுள்ளனர். 

அந்த விழாவில் சிறுவர்கள் மூன்று பேர் ஆரவாரமாக சுற்றி திரிந்துள்ளனர். அவர்கள், திருவிழாவிற்காக போடப்பட்டுள்ள கடைகளில் சென்று தங்களுக்கு பிடித்த தின்பண்டங்களை வாங்கி  உண்டுள்ளனர். அதற்காக கடைக்காரர்களிடம் 200ரூ கொடுத்துவிட்டு சென்றுள்ளனர். 

அவர்கள் கொடுத்துவிட்டது சென்ற 200ரூ நோட்டை பார்த்த கடைக்காரர்களுக்கு சந்தேகம் வந்துள்ளது. காரணம், சிறுவர்கள் கொடுத்த நோட்டுக்கும் மற்ற 200ரூ நோட்டுகளுக்கும் அதிகளவில் வித்தியாசங்கள் இருந்ததை காணமுடிந்துள்ளது.

இதில் அதிக சந்தேகமடைந்த கடைக்காரர்கள், உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்து வரவழைத்துள்ளனர். அங்கு வந்த போலீசார், வேதாரண்யம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். 

இந்த தேடுதல் வேட்டையில், மருதூர் வடக்குத்தெருவைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர்கள் 3 பேர் பிடிபட்டனர். அவர்களை விசாரித்ததில், அவர்கள் கள்ளநோட்டு தயாரித்தது தெரியவந்துள்ளது.

தற்போது பள்ளி விடுமுறை என்பதால், உறவினரின் ஸ்டுடியோவில் வேலை பார்த்து வந்த 3 சிறுவர்களுள் ஒருவன், 200ரூ நோட்டை கலர் ஜெராக்ஸ் அச்சடித்து, கள்ளநோட்டு தயாரித்துள்ளார். தான் தயாரித்த கள்ளநோட்டுகளை, மற்ற 2 நண்பர்களிடம் காண்பித்தது மட்டுமல்லாமல், திருவிழாக் கடைகளில் புழக்கத்திலும் விட்டுள்ளார். 

மேலும் விசாரணையில், முதலில் 2000ரூ நோட்டுகளை தான் அச்சடிக்க திட்டமிட்டதாகவும், ஆனால் சமீபத்தில் 2000ரூ நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக மத்திய அரசு அறிவித்ததால், 200ரூ நோட்டுகளை அச்சடித்ததாக கூறியுள்ளனர்.

விசாரணைக்குப் பின், காவல்துறையினர் 3 சிறுவர்களையும் கைது செய்து சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் சேர்த்தனர். 

சிறுவர்களின் இச்செயல், திருவிழாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com