
திண்டுக்கல் மாவட்டம் NS நகர் பகுதியை சேர்ந்தவர் 54 வயதான கண்ணன், இவர் வ உ சி நகரை சேர்ந்த நிதி நிறுவனம் நடத்தி வரும் 58 வயதான குபேந்திரன் என்பவரிடம் குறிப்பிட்ட தொகையை கடனாக பெற்றுள்ளார். பலமுறை கடனை திருப்பி கேட்டும் கண்ணன் கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார். இதனால் குபேரன் அவ்வப்போது கண்ணன் வீட்டுக்கு பணம் வாங்க சென்று வந்துள்ளார்.
கண்ணனின் மனைவி இறந்த நிலையில், குரும்பப்பட்டியை சேர்ந்த 59 வயதான ஷாந்தி என்பவர் கண்ணன் வீட்டில் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று கண்ணனின் உறவுக்கார பெண்ணான 26 வயதான பிரியா கண்ணனை பார்க்க திருப்பூரில் இருந்து திண்டுக்கல் வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல் குபேந்திரன் கொடுத்த கடனை திருப்பி வாங்க கண்ணன் வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது கண்ணன் மற்றும் கேபேந்திரனுக்கு இடையே பணம் கொடுக்கல் வாங்கல் சம்மந்தமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறிய நிலையில் கண்ணன் குபேந்திரனை பிடித்து கீழே தள்ளி விட்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்த குபேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த கண்ணன் குபேந்திரன் கொலையை மறைக்க திட்டமிட்டுள்ளார்.
இதற்கு வீட்டில் இருந்த ஷாந்தி மற்றும் பிரியா உதவி செய்துள்ளனர். அதன்படி பக்கத்து தெருவில் டாடா ஏசி வாகனம் வைத்துள்ள கணேஷ் என்பவரிடம் வாடகைக்கு வாங்கியுள்ளார். இரவு அனைவரும் உறங்கிய பின் குபேந்திரனின் கைகால்களை உடலோடு சேர்த்து இறுக்கமாக கட்டி அட்டை பெட்டிக்குள் போட்டுள்ளனர். பின்னர் அட்டை பெட்டியை நன்கு கயிறை பயன்படுத்தி காட்டியுள்ளனர்.
பழனிக்கு செல்லும் பைபாஸ் ரோட்டில் ராமய்யன் பெட்டிக்கு அருகே உள்ள தரை பாலத்தில் அட்டை பெட்டியை வீசி விட்டு எதுவும் தெரியாதது போல கண்ணன் வீட்டிற்கு வந்துள்ளார். இரண்டு நாட்கள் அட்டை பெட்டியை யாரும் கண்டுகொள்ளாத நிலையில் மூன்றாவது நாள் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அவதிப்பட்ட அப்பகுதி போலீசில் தகவலாளித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் அட்டைப் பெட்டியில் இருந்த குபேந்திரனின் உடலை கைப்பற்றியுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர் அதில் கண்ணன் குபேந்திரனை கொலை செய்ததும் அதற்கு சாந்தி மற்றும் பிரியா துணையாக இருந்ததும் தெரியவந்துள்ளது.
மூவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். கொடுத்த கடனை திருப்பி கேட்டதற்காக ஒருவர் கொலை செய்யப்பட்டு அட்டைப் பெட்டிக்குள் போடப்பட்டிருந்தது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.