
காஞ்சிபுரம் மாவட்டம் கருமாங்கழனி கிராமத்தில் வசித்து வந்தவர்கள் பீகாரை சேர்ந்த நீரஜ் குமார், காஜல் குமாரி தம்பதிகள் இவர்களுக்கு ஐந்து வயதில் ஆரவ் குமார் என்ற மகன் இருந்த நிலையில் கணவன் மனைவி இருவரும் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளனர்.
கடந்த (ஜூன் 09) தேதி வேலை முடிந்து வீட்டிற்கு வந்த தம்பதிகள் குழந்தை வீட்டில் இல்லாததால் ஊர் முழுக்க ஆராவை தேடியுள்ளனர். அங்கு தேடியும் மகன் கிடைக்காததால் குழந்தையை காணவில்லை என போலீசில் புகாரளித்துள்ளனர். இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் (ஜூன் 12) வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள புதரில் ஒரு ஆண் சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இறந்து கிடப்பது ஆரவ் என்பதை உறுதிபடுத்தியுள்ளனர். உடனடியாக பெற்றோருக்கு தகவலளித்த போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
முதலில் விளையாட சென்ற சிறுவன் தவறி விழுந்து அடிபட்டு இறந்திருக்கலாம். என அனைவரும் நினைத்த நிலையில் போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில் சிறுவனை அவரது வீட்டிற்கு அருகில் வசித்து வந்த அசாமை சேர்ந்த 22 வயதான போல்தேவ் என்ற நபர் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்றது தெரியவந்தது.
சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் போல்தேவை கைது செய்து விசாரணை மேற்கொண்ட போலீசாருக்கு போல்தேவ் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. “ஓரின சேர்க்கைக்கு அடிமையான போல்தேவ் அவ்வப்போது சிறுவனுடன் பேசி பழகி வந்துள்ளான். சம்பவத்தன்று வீட்டிற்கு வெளியில் விளையாடி கொண்டிருந்த சிறுவனிடம் பேச்சு கொடுத்துள்ளார்.
பின்னர் சிறுவனுக்கு பொம்மைகள் சாக்லேட்கள் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி தன்னுடன் அழைத்து சென்றுள்ளார். சிறுவனை ஆள் நடமாட்டம் இல்லதா பகுதிக்கு அழைத்து சென்ற போல்தேவ் சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளார். அப்போது சிறுவன் ஒத்துழைக்காமல் கத்தி கூச்சலிட்டதால் ஆத்திரமடைந்த போல்தேவ் சிறுவனை கற்களை கொண்டு தாக்கி கொலை செய்து விட்டு தப்பி சென்றது தெரியவந்துள்ளது” இதையடுத்து போல்தேவை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.