மகளின் கள்ளக்காதலனை.. பிளான் போட்டு தீர்த்துக்கட்டிய தந்தை! செங்கல்பட்டு கொலையில் வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்?

பெண்ணின் சகோதரர் மற்றும் அப்பா இருவரும் அந்த பெண்ணிடம் கண்டித்து ரமேஷின் தொடர்பை விட்டுவிடும்படி கூறியுள்ளனர்
murder
Published on
Updated on
1 min read

செங்கல்பட்டு அடுத்த புலிப்பாக்கம் பகுதியில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ள புதிய வீட்டுமனைகள் அமைக்கப்பட்டுள்ள காலி இடத்தில் வெட்டுக்காயங்களுடன் ஒரு ஆண் சடலம் கிடப்பதாக செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது செங்கல்பட்டு காவல்துறை.

காவல்துறை நடத்திய விசாரணையில் இறந்த நபர் செங்கல்பட்டு சின்ன நத்தம் தட்டான்மலை பகுதியை சேர்ந்த அப்புனு என்கிற ரமேஷ்(40) என்பது உறுதி செய்யப்பட்டது. இது குறித்து தொடர்ந்து நடத்திய விசாரணையில் இறந்த நபருக்கும் செங்கல்பட்டு நகர் பகுதியை சேர்ந்த திருமணமான ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது தெரியவந்தது. இதுகுறித்து அந்த பெண்ணின் சகோதரர் மற்றும் அப்பா இருவரும் அந்த பெண்ணிடம் கண்டித்து ரமேஷின் தொடர்பை விட்டுவிடும்படி கூறியுள்ளனர். அதேபோல் ரமேஷிடமும், “ தனது மக்களுடனான தொடர்பை விட்டு விடுமாறு கண்டித்துள்ளனர்.

அதை பொருட்படுத்தாத இருவருமே தொடர்ந்து ஒருவருக்கொருவர் சந்தித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. நேரடியாக கண்டித்தும் கள்ள உறவை விடாமல் தொடர்ந்ததால் ரமேஷை தீர்த்துக்கட்ட இருவரும் திட்டமிட்டு காத்திருந்திருந்துள்ளனர். இந்நிலையில் ரமேஷ் மது அருந்திக் கொண்டிருந்த போது இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டி உள்ளனர். கடுமையான தாக்குதலுக்கு உள்ளான ரமேஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். அதனையடுத்து ரமேஷின் உடலை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர். ஆனால் கொலை செய்த அந்த மர்மநபர்கள் ஐந்து பேர் யார்.. என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்கல்பட்டு சுற்று வட்டாரத்தில் கடந்த 10 நாட்களில் மட்டும் இதுவரை 3 கொலை சம்பவங்கள் நடந்துள்ளது. இந்த சம்பவங்கள் அப்பகுதி பொது மக்களிடையே கடும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com