"கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த தந்தை.. உணவில் விஷம் வைத்த மகள்" - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கணவன் வெளிநாட்டில் பணியாற்றி வந்த நிலையில், மனைவி முருகவள்ளி (45 ) சிக்கல் கிராமத்தில் வசித்து வந்துள்ளார்
ramanadhapuram murder
Published on: 
Updated on: 
1 min read

தந்தையை விஷம் வைத்து கொலை செய்த மகளுக்கு பரமக்குடி கூடுதல் மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே சிக்கல் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகவேலு. இவர் வெளிநாட்டில் பணியாற்றி வந்த நிலையில், இவரது மனைவி முருகவள்ளி (45 ) சிக்கல் கிராமத்தில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முருகவள்ளிக்கும், அதே ஊரைச் சேர்ந்த இளையராஜா (40) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் கள்ளக்காதலாக மாறி இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இதை முருகவள்ளியின் தந்தை கருப்பையா( 65) கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த மகள் முருகவள்ளி, ஆண் நண்பர் இளையராஜாவுடன் சேர்ந்து தனது தந்தையை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

அதன்படி 21.4.2018 அன்று இரவு முருகவள்ளி, தந்தை கருப்பையாவுக்கு மீன் குழம்பு சாப்பாட்டில், பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து கொடுத்துள்ளார். அதை சாப்பிட்ட கருப்பையா, ஆபத்தான நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் உயிரிழந்தார்.

இது குறித்து சிக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் முருகவள்ளி தனது ஆண் நண்பரின் பழக்கத்துக்கு இடையூறாக தந்தை கருப்பையா இருந்ததால் மீன் குழம்பு சாப்பாட்டில் விஷம் வைத்து கொலை செய்தது தெரிய வந்தது. அதனையடுத்து மகள் முருகவள்ளி மற்றும் இளையராஜா ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இது தொடர்பான வழக்கு பரமக்குடி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் கூடுதல் மாவட்ட நீதிபதி பாலமுருகன், முருகவள்ளிக்கு ஆயுள் தண்டனையும், ரூ. ஆயிரம் அபராதமும், இளையராஜாவை போதிய சாட்சிகள் இல்லாததால் விடுதலை செய்தும் உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் அருண்குமார் ஆஜரானார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com