

புளோரிடாவைச் சேர்ந்த திருமணமான தாய் ஒருவர், தனது பதின்மவயது மகனுடன் உடலுறவில் இருந்ததை கணவரிடம் மறைத்து வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இருவரும் "சுமார் 100 முறை" உடலுறவு கொண்டதாக ஒப்புக்கொண்டதை அடுத்து, இருவர் மீதும் முறையற்ற உறவுக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
போல்க் கவுண்டி ஷெரிப்பின் கூற்றுப்படி, கடந்த மாதம் 46 வயது கிறிஸ்டினா கிளெமென்ஸ் (தாய்), 22 வயதான ஷேன் கிளெமென்ஸ் தன்னைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டி காவல்துறையை அழைத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த 22 வயது ஷேன் கிளெமென்ஸால் தன் தாயுடனான உறவு குறித்து காவல்துறையிடம் தெரிவித்துள்ளார். மேலும் தாயை அடித்ததற்காக போலீசார் அவரது மகனை கைது செய்துள்ளனர். அதன் பிறகு ஷேன், "சரி, நான் ஒன்று சொல்கிறேன், எனக்கு 18 வயதிலிருந்தே என் அம்மாவுடன் உடலுறவு கொண்டு வருகிறேன்" என காவல்துறையிடம் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அந்த தாயிடம் கேட்டதற்கு அவர், "சுமார் 100 முறை மட்டுமே" எனக் கூறியுள்ளார். பின்னர் புலனாய்வாளர்கள் கிறிஸ்டினாவின் கணவரிடம் பேசியபோது, அவர்கள் இருவரும் மகிழ்ச்சியாகத் திருமண வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும், எந்த வித மனக்கசப்பும் இன்றி ஒன்றாக வசிப்பதாகவும் அவர் தரப்பில் இருந்து கூறியுள்ளார். "அவரது மனைவி தங்களது மகனுடன் உடலுறவு கொள்வது அவருக்குத் தெரியுமா?" என்று கேட்டபோது, "இல்லை" என்று அவர் தெரிவித்துள்ளார். ஆனால், அவர்கள் இருவரும் ஒன்றாக படுக்கையறைக்குள் சென்று கதவைப் பூட்டிக்கொள்வார்கள் அதுதான் சற்று சந்தேகமாக இருந்தது என்று அவர் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டினா மீது முறையற்ற உறவுக் குற்றச்சாட்டும், திருமணத்திற்கு மீறிய உறவில் ஈடுபட்ட குற்றச்சாட்டும், குடும்ப வன்முறைக் குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளதாக ஆவணங்கள் சுட்டிக்காட்டுகின்றன. மேலும், செப்டம்பர் 4 அன்று அவர் மொத்தம் 6,250 டாலர் ஜாமீன் தொகையில் விடுவிக்கப்பட்டுள்ளார். தற்போது ஷேன் கிளெமென்ஸ்அவர் பிணை இல்லாமல் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்