சிங்கப்பூரில் கொல்லப்பட்ட தமிழர்! ஒரு மாதத்திற்கு பின் தாயகம் வந்த உடல்.. வெளிவருமா குற்ற பின்னணி?

"எனது மகனின் உடலுடன், மகனின் செல்போன் வழங்கினால் தான் உடலை பெற்றுக் கொள்வோம் என்றும்.. "
pudukottai man killed in Singapore
Published on
Updated on
2 min read

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலிதநல்லூர் கீழத்தெருவை சேர்ந்தவர் ராசு. இவரது மகன் மகேஷ் குமார் (30). டிப்ளமோ இன்ஜினியரிங் முடித்த இவர், சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று இரவு கொலை செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து மகேஷ் குமார் கொலை தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இருவரை சிங்கப்பூர் போலீசார் கைது செய்துள்ளனர். 

தற்போது கொலை செய்யப்பட்ட ராசுவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் சிங்கப்பூரிலிருந்து சொந்த ஊருக்கு கொண்டு வர அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு விடுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மகேஷ் குமாரின் தாயார் மாலதி செய்தியாளர்களிடம் கூறியதாவது, “இரண்டு வருடங்களாக சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த எனது மகன் கடந்த ஆகஸ்ட் 4 -ஆம் தேதி சிங்கப்பூரில் உள்ள தனியார் கம்பெனிக்கு வேலைக்கு சென்றான். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணிக்கு தனது மகன் இறந்ததாக உறவினருக்கு சிங்கப்பூரிலிருந்து தகவல் கொடுத்துள்ளனர். அவர் எதற்காக கொலை செய்யப்பட்டாரா? என்ற தகவலை அவர் பணிபுரிந்த தனியார் நிறுவனம் சரியாக பதில் சொல்லவில்லை. எனது மகனின் உடலுடன், மகனின் செல்போன் வழங்கினால் தான் உடலை பெற்றுக் கொள்வோம் என்றும் எனது மகனின் கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும்” என்றும் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட மகேஷ் குமாருக்கு செலின் என்ற மனைவியும் 7 வயதில் மதிமாறன், ஐந்து வயதில் சதீஷ்மாறன் என்ற இரு மகன்கள் உள்ளனர். மகேஷ் குமார் உயிரிழப்பு அவரின் சொந்த ஊரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் செப் 2 - நேற்று இரவு கொலை செய்யப்பட்ட மகேஷ் குமார் உடல் சிங்கப்பூரிலிருந்து சென்னை - மதுரை மார்க்கமாக விமானத்தில் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து அவருடைய சொந்த ஊரான சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலிதநல்லூர் கிராமத்தில் அவருடைய உறவினர்கள் அவருடைய உடலுக்கு இறுதிச் சடங்குகளை செய்தனர். அதையடுத்து கொலைக்கான காரணம் மற்றும் வேறு யாருக்கேனும் கொலையில் தொடர்பு உள்ளதா போன்ற பல்வேறு கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com