மாணவனுடன் வீட்டில் உல்லாசத்தில் இருந்த ஆசிரியை! "12 முறை உடலுறவு கொண்டதாக திடுக்கிடும் வாக்குமூலம்"

மாணவருடன் பலமுறை பாலியல் உறவு கொண்டதை ஒப்புக்கொண்ட முன்னாள் சிறப்புக்கல்வி ஆசிரியை ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Sexual misconduct in school
Sexual misconduct in schoolSexual misconduct in school
Published on
Updated on
1 min read

போதைப்பொருள் உட்கொண்டிருந்த நிலையில், தன் மாணவருடன் பலமுறை பாலியல் உறவு கொண்டதை ஒப்புக்கொண்ட முன்னாள் சிறப்புக்கல்வி ஆசிரியை ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மிஷெல் மெர்கோக்லியானோ பாலியல் வன்கொடுமை மற்றும் சிறார்களைச் சீரழித்த குற்றங்களை ஒப்புக்கொண்டார் . 36 வயதான அவர், "ஒரு உயர்நிலைப் பள்ளி மாணவருடன் உடலுறவு கொண்டதையும், அவருக்குக் கஞ்சா வழங்கியதையும் ஒப்புக்கொண்டுள்ளார்" என்று மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம் கூறியது. பின்னர் தனது வேலையிலிருந்து நீக்கப்பட்ட கோனஸ்டோகா உயர்நிலைப் பள்ளி ஆசிரியை, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவரது குற்றச்செயல் 2025 பிப்ரவரியிலேயே தொடங்கியதாக அதிர்ச்சித்தகவல் வெளியாகியுள்ளது. அவர், தான் வாங்கிய மருத்துவக் கஞ்சாவை 16 வயது மாணவருக்குக் குறைந்தது 15 முறையாவது வழங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.

நீதிமன்ற ஆவணங்களின்படி, மிஷெல் அந்த மாணவருடன் உடலுறவு கொள்வதற்கு முன்பு கஞ்சா புகைப்பார்கள், மேலும் அந்த உடலுறவு வழக்கமாக "மிஷெலின் பெற்றோரின் இல்லத்தில் உள்ள ஒரு படுக்கையறையில்" நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார். இவர்கள் இருவரும் குறைந்தது பன்னிரண்டு முறை உடலுறவு கொண்டதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன. அவர்களுடைய பெரும்பாலான சந்திப்புகள், வெய்னில் உள்ள மிஷெலின் பெற்றோர் வீட்டில் நடைபெற்றன. மாணவன் தனது பாலியல் உறவைத் தன் சகோதரியிடம் வெளிப்படுத்தியதை அடுத்து, அதிகாரிகள் மிஷெலை விசாரிக்கத் தொடங்கினர். அச்சகோதரி பின்னர் அவர்களின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், மிஷெலுக்கு பென்சில்வேனியா மாநில சிறையில் 15 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், அவர் ஆறரை ஆண்டுகளுக்கும் மேலாக நன்னடத்தைக் காலத்தை நிறைவு செய்ய வேண்டும், அத்துடன் 25 ஆண்டுகளுக்கு "இரண்டாம் நிலை பாலியல் குற்றவாளி"யாகப் பதிவு செய்துகொள்ளவும் வேண்டும் என்றும் கூறியுள்ளது. இதனையடுத்து, அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதால், தனது ஆசிரியர் உரிமத்தையும் தனது நன்னடத்தை காலத்தில் அவர் குழந்தைகளுடன் பணிபுரியவும் தடை விதிக்கப்படும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com