நான்கு ஆண்டுகளாக மாணவனுடன்.. உடலுறவில் இருந்த ஆசிரியர்! தகாத உறவால் குழந்தை பிறந்ததா? உண்மையை போட்டுடைத்த சகோதரி

பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு 11 வயதாக இருந்தபோதில் இருந்து அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்த தொடங்கியுள்ளார் என்று புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
New Jersey teacher sexual abuse case
New Jersey teacher sexual abuse case
Published on: 
Updated on: 
1 min read

அமெரிக்காவின், நியூ ஜெர்சியைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர், நான்கு ஆண்டுகளாக ஒரு மாணவரைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதை ஒப்புக்கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அந்த ஆசிரியருக்கு பிறந்த குழந்தைக்கு அந்த மாணவன்தான் தந்தை என்ற செய்தியும் வெளியாகியுள்ளது.

அக்டோபர் 30, வெள்ளிக்கிழமை அன்று, கேப் மே வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்ட செய்தியில், மிடில் டவுன்ஷிப்பைச் சேர்ந்த 36 வயதான முன்னாள் ஆசிரியை லாரா கரோன், மாணவர் ஒருவருடன் உடலுறவில் இருந்ததை ஒப்புக்கொண்டுள்ளார் எனத் தெரிவித்துள்ளது.

"ஒரு ஆண் மாணவருடன் ஆசிரியருக்கு பாலியல் உறவு இருந்தது" என்ற புகாரின் அடிப்படையில், கேப் மே கவுண்டி வழக்கறிஞர் அலுவலகத்தில் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, கரோன் (ஆசிரியர்) மீது 2025, ஜனவரி 15 அன்று குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு, அதே ஆண்டு ஜூன் மாதம் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மிடில் டவுன்ஷிப் தொடக்கப் பள்ளியின் முன்னாள் ஐந்தாம் வகுப்பு ஆசிரியரான கரோன், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு 11 வயதாக இருந்தபோதில் இருந்தே அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்த தொடங்கியுள்ளார் என்று புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு 13 வயதாகவும், கரோனுக்கு 27 வயதாகவும் இருந்தபோது, ​​2019-ம் ஆண்டில் கரோன் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், பாதிக்கப்பட்ட சிறுவனின் சகோதரி புலனாய்வாளர்களிடம், தன் சகோதரர்தான் அந்தக் குழந்தையின் தந்தை என்று கூறியதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், அவரது சகோதரன் சில சமயங்களில் பெற்றோரின் அனுமதியுடன் கரோனின் வீட்டிற்கு சென்று தங்குவார் என்றும், அதன் பிறகு 2016-ம் ஆண்டில் முறையான கரணங்கள் எதுவும் தெரிவிக்காமல் அந்த ஆசிரியருடன் சேர்ந்து வாழத் தொடங்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கேப் மே வழக்கறிஞர் அலுவலகத்தின்படி, கரோன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதன் விளைவாக, நியூ ஜெர்சி மாநில சிறையில் ஐந்தாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படுவதுடன், அவர் தனது ஆசிரியர் உரிமத்தையும் எதிர்கால அரசுப் பணிகள் அனைத்தையும் இழக்க நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கரோன் தனது மாநில சிறைத் தண்டனையை அனுபவித்து முடித்த பிறகு, குற்றவாளிகள் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டியிருக்கும் என்றும் அவர் தனது வாழ்நாள் முழுவதும் பரோல் மேற்பார்வைக்கு உட்பட்டிருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த குற்றத்திற்கான தண்டனைத் தீர்ப்பு 2027, ஜனவரி 8 அன்று கரோனுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.