தெலுங்கானா மாநிலம், காமரெட்டி மாவட்டம் ஹன்மாஜிபேட் பகுதியை சேர்ந்தவர் 26 வயதுடைய காஷிராம். கூலித்தொழில் செய்து வந்த இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 25 வயதுடைய சவிதா என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு பிறகு இருவரும் தனியாக வீடு எடுத்து வசித்து வந்த நிலையில் காஷிராமின் தம்பி முறை உறவினரான 25 வயதுடைய சந்தோஷ் அடிக்கடி காஷிராமின் வீட்டிற்கு வந்து செல்வதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். அப்போது சவிதாவிற்கும் சந்தோஷுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. காஷிராம் வீட்டில் இல்லாதபோது அடிக்கடி இருவரும் உல்லாசமாக இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் சந்தோஷுடன் சேர்ந்து வாழ நினைத்த சவிதா அதற்கு இடையூறாக இருந்த கணவர் காஷிராமை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்கிடையில் காஷிராமும் அதே பகுதியை சேர்ந்த பெண்ணுடன் கள்ளத் தொடர்பில் இருந்ததாக சொல்லப்படுகிறது.
இதில் காஷிராமிற்கும் அதே பகுதியை சேர்ந்த 26 வயதுடைய ராமு என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. எனவே பழி வாங்க நினைத்த ராமு, சவிதா மற்றும் அவரது கள்ளக்காதலன் சந்தோஷுடன் சேர்ந்து காஷிராமை கொல்ல நினைத்துள்ளார். அதன்படி கடந்த (அக் 23 )ஆம் தேதி காஷிராமை சந்தோஷ் மது அருந்துவதற்கு பச்சிர ஏரி பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அமர்ந்து இருவரும் மது அருந்திய நிலையில் காஷிராம் போதை தலைக்கேறி சுயநினைவின்றி கிடந்ததாக சொல்லப்படுகிறது.
இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சந்தோஷ் ராமுவுடன் சேர்ந்து நாயிலன் கயிற்றால் காஷிராமின் கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கின்றனர். பின்னர் உடலை ஏரியில் வீசி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதையடுத்து காஷிராமின் தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கொலை நடந்த அதே நாளில் ஏரியில் இருந்து காஷிராமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரணையை தொடங்கினர்.
முதற்கட்டமாக அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்த நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் சந்தோஷை பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் கடந்த (அக் 30) ஆம் தேதி அவர் அளித்த தகவலின் அடிப்படையில் ராமு மற்றும் சவிதாவை கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது கள்ளக்காதல் விவகாரத்தில் திட்டமிட்டு கொலை செய்தது தெரியவந்துள்ளது. கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியே கணவனை திட்டமிட்டு கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.