

வாஷிங்டன் மாநிலத்தைச் சேர்ந்த, பள்ளி ஆசிரியை ஒருவர், லாரி ஒன்றில் 16 வயது சிறுவனுடன் இரகசியமாக பாலியல் உறவு கொண்டதை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, சலுகை அடிப்படையிலான குற்ற ஒப்புதல் ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளார்.
வாஷிங்டனில் உள்ள பள்ளியில் முதலாம் வகுப்பு ஆசிரியையாக பணியாற்றிய 25 வயதான மெக்கன்சி நாட், ஒரு சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்பட்ட ஒரு குற்றச்சாட்டை அவர் தாமாக முன்வந்து ஒப்புக்கொண்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இறுதி செய்யப்பட்ட அவரது ஒப்புதல் வாக்குமூல ஒப்பந்தத்தின்படி, அதிகபட்சமாக விதிக்கப்படக்கூடிய ஐந்து வருட தண்டனையிலிருந்து குறைத்து, 12 மாதங்கள் வரை மாவட்டச் சிறைத்தண்டனை பரிந்துரைக்கப்படுவதாக நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
16 வயதுடைய சிறுவன் விசாரணையின்போது சாட்சியம் அளிக்க வேண்டிய அவசியத்திலிருந்து அவரைக் விடுவிப்பதற்காகவே மெக்கன்சிக்கு சலுகை அடிப்படையில், அதாவது தாமாக முன்வந்து குற்றத்தை ஒப்புக்கொண்டதற்காக தண்டனையின் கால அளவு குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணத்திற்காகவே அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் மெக்கன்சிக்கு இந்தக் குற்ற ஒப்புதல் ஒப்பந்தத்தை வழங்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மெக்கன்சியின் கணவர், அவரது மனைவியின் கைபேசியில் அந்த மாணவருடனான உறவுக்கான ஆதாரங்களைக் கண்டறிந்து குறிப்பாக ஆபாச சாட்களை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். அதன் பின்னர், சட்ட அமலாக்க அதிகாரிகளைத் தொடர்பு கொண்டதை அடுத்து இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, மெக்கன்சி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுவன் படித்த அதே உயர்நிலைப் பள்ளியில் உதவி தடகளப் பயிற்சியாளராக இருந்த மெக்கன்சியின் கணவர் காரெட், தற்போது விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகியிருந்ததாக நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டுள்ளன. மேலும், காவல்துறையினர் அருகிலுள்ள உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 16 வயது மாணவர் ஒருவருடன் மெக்கன்சி தகாத உறவைத் தொடங்கியிருந்ததை புலனாய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர்.
காவல்துறை பதிவுகளின்படி, இருவரும் ஒரு ஒதுக்குப்புறமான பகுதியில் வாகனத்தில் பாலியல் உறவுக்காகச் சந்தித்துள்ளனர். மேலும், சட்டப்பூர்வ நிபந்தனைகளின் ஒரு பகுதியாக, மெக்கன்சி 10 ஆண்டுகளுக்கு பாலியல் குற்றவாளியாகப் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் அவர் பள்ளி வளாகத்திற்குள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த குற்றத்திற்காக முறைப்படியான தண்டனைத் தீர்ப்பு, வரும் ஆகஸ்ட் 28 அன்று வழங்கப்பட உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. காவல்துறையின் விசாரணையைத் தொடர்ந்து, மெக்கன்சி பணியாற்றிய பள்ளியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும், இவருக்கு பரிந்துரைத்தது போல் 12 மாதங்களுக்கு கூட தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.