
காரில் ஒட்டியிருந்த ஸ்டிக்கரால் வந்த பிரச்னை! - விமானப்படை அதிகாரியை தாக்கிய மர்ம கும்பல்..! இணையத்தில் வைரலாகும் பதிவு!
பெங்களூரு; கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று விமானப்படை அதிகாரி ஒருவர் இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்களால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய விமானப் படையில் விங் கமாண்டராக பணிபுரிந்து வரும் ஆதித்யா போஸும் அவரது மனைவி மதுமிதாவும் CV ராமன் நகரில் உள்ள DRDO (Defence Research and Development Organisation) ( பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்) காலணியிலிருந்து விமான நிலையத்திற்கு காரில் சென்றுள்ளனர்.
அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் காரை மடக்கி ஆதித்யாவையம் அவரது மனைவியையும் மோசமாக பேசி தாக்க துவங்கியுள்ளனர்.
இதில் அதிர்ச்சி அடைந்த தம்பதி செய்வதறியாது திகைத்துள்ளனர். இந்த நேரத்தில்தான் போஸ் தனது வாகனத்தில் ஒட்டியிருந்த DRDO ஸ்டிக்கரை பார்த்துள்ளனர். அதை பார்த்த உடனே தான் அவர்கள் இன்னும் மூர்க்கமாகி, போஸை தாக்க துவங்கினர், நிலையை கட்டுக்குள் கொண்டுவர போஸ் காரை விட்டு கீழே இறங்கியுள்ளார். அப்போதுதான் நிலைமை இன்னும் மோசமடைந்திருக்கிறது.
ஆனால் மர்ம நபர்கள் அவரை வண்டி சாவியை வைத்து தாக்கியதில் போஸின் முகம் மற்றும் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு ரத்தம் வழிந்தோடியது, மேலும் மதுமிதாவையும் அந்த மர்ம நபர்கள் ஆபாசமாக பேசியுள்ளனர்.
இந்நிலையில் மதுமிதா அருகிலிருந்த காவல் நிலையத்திற்கு காரை ஓடிச்சென்று சம்பவம் தொடர்பாக புகார் அளித்துள்ளார்.
இந்த தாக்குதல் குறித்து ஆதித்யா போஸ் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் முழுமையாக பதிவிட்டிருக்கிறார். தற்போது அவரின் இந்த பதிவு இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் போஸ் தனது பதிவு “ நாட்டிற்காக உழைக்கும் எங்களுக்கு கிடைக்கும் வெகுமதி இதுதானா?? கடவுளே எங்களுக்கு உதவி செய்யுங்கள்.. தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் நிலைக்கு கொண்டு செல்லாதீர்கள்! எதிர்காலத்தில் ஒருவேளை சட்டம் தனது கடமையை செய்யாவிட்டால் நான் நிச்சயம் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பேன்” என அவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிலளித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்