சொந்த பாட்டியை போய்.. எப்படி தான் மனசு வந்துச்சோ? குடிபோதையில் மிருகமாக மாறிய பேரன்!

தனக்கு இரண்டாயிரம் ரூபாய் பணம் வேண்டும் என கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.
சொந்த பாட்டியை போய்.. எப்படி தான் மனசு வந்துச்சோ? குடிபோதையில் மிருகமாக மாறிய பேரன்!
Published on
Updated on
2 min read

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அடுத்துள்ள சின்ன பிள்ளையூர் கிராமத்தை சேர்ந்தவர் 74 வயதான குப்பம்மா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருடைய கணவர் இறந்து 20 ஆண்டுகள் ஆன நிலையில் இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் என மூன்று பிள்ளைகளுக்கும் குப்பம்மா தனியாக இருந்து திருமணம் வைத்துள்ளார்.

இரண்டு மகன்களும் வெளியூரில் தங்கி வேலை செய்வதால் அவர்கள் குடும்பத்துடன் வெளியூரில் வசித்து வந்துள்ளனர். குப்பம்மாவின் மகள் மட்டும் தாய் வசிக்கும் தெருவிற்கு பக்கத்துக்கு தெருவில் வசித்து வருகிறார். இவருக்கு 31 வயதில் பிரகாஷ் என்ற மகன் உள்ள நிலையில் அவர் குடிபோதைக்கு அடிமையாகி உள்ளார்.

எனவே அவ்வப்போது தனது பாட்டியான குப்பம்மாளிடம் சென்று பணம் கேட்பதை வழக்கமாக வைத்துள்ளார். குப்பம்மாளுக்கு வயதாகி விட்டதால் அவர் எந்த வேலைக்கும் செல்லாமல் அவருக்கு வரும் ஊக்க தொகையை வைத்து வாழ்ந்து வந்துள்ளார். இருப்பினும் பிரகாஷ் கேட்கும் போது தன்னால் முடிந்த 100 , 200 ரூபாயை கொடுத்து வந்துள்ளார்.

சமீப காலமாக பிரகாஷ் மூதாட்டி கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொள்ளாமல். ஆயிர கணக்கில் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். இந்நிலையில் பிரகாஷ் கடந்த (ஜூன் 20) தேதி தனது பாட்டியிடம் சென்று தனக்கு இரண்டாயிரம் ரூபாய் பணம் வேண்டும் என கேட்டு தொந்தரவு செய்துள்ளார். மூதாட்டி தன்னிடம் பணம் இல்லை என கூறி கடுமையாக திட்டியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ் தனது பாட்டியை கீழே தள்ளி கடுமையாக தாக்கியுள்ளார். மேலும் அவரை பாலியல் பலாத்காரம் செய்து கொன்று அவரிடம் இருந்த ஐந்தாயிரம் பணத்தை எடுத்து சென்றுள்ளார். எதிர்ச்சியாக மூதாட்டியின் வீட்டிற்கு சென்ற பக்கத்துக்கு வீட்டு பெண் மூதாட்டி அரை நிர்வாணமாக ரத்த வெள்ளத்தில் மிதந்து உயிரிழந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

Admin

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்த நிலையில் அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் படி திருச்செந்தூரில் பதுங்கி இருந்த பிரகாஷை கைது செய்தனர்.

பிரகாஷிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் தனது பாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் மூதாட்டியின் பிரேத பரிசோதனையில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது. எனவே பிரகாஷை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com