
ஆந்திர மாநிலம் கர்னூல் பகுதியை சேர்ந்தவர் தேஜஸ்வர். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். தேஜஸ்வரின் வீட்டில் அவருக்கு திருமணம் செய்து வைக்க பெண் பார்த்து வந்துள்ளனர். தேஜஸ்வரின் பக்கத்துக்கு ஊரில் வசித்து வரும் ஐஸ்வர்யா என்ற பெண்ணை கடந்த ஜனவரி மாதம் பெற்றோர்கள் தேஜஸ்வருக்கு நிச்சயம் செய்துள்ளனர்.
தேஜஸ்வர் மற்றும் ஐஸ்வர்யாவிற்கு கடந்த (பிப் 16) தேதி திருமணம் நடக்க இருந்த நிலையில் திருமணத்திற்கு ஐந்து நாட்கள் முன்பு ஐஸ்வர்யா வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். இதனை அறிந்த தேஜஸ்வரின் குடும்பம் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளார். எங்கு தேடியும் கிடைக்காத ஐஸ்வர்யா பின்னர் 10 நாட்கள் கழித்து தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதனை அறிந்த தேஜேஸ்வர் நேரடியாக ஐஸ்வர்யா வீட்டிற்கு சென்று “ஏன் இப்படி செய்தாய் யாரையாவது காதலிக்கிறாயா இல்லை என்னை பிடிக்கவில்லையா” என கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த ஐஸ்வர்யா “உங்கள் பெற்றோர்கள் அதிகமாக வரதட்சணை கேட்டார்கள் அது எங்களால் கொடுக்க முடியாது எனவே நான் சென்றேன்” என கூறியுள்ளார்.
இதனால் கோபமடைந்த தேஜேஸ்வர் இதை பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும் இப்போதே நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன். என கூறி ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டுள்ளார். மகனின் ஆசைக்கு மறுப்பு தெரிவிக்காத தேஜஸ்வரின் பெற்றோர்கள் திருமணத்தை முன்நின்று நடத்தி வைத்துள்ளனர்.
பின்னர் ஐஸ்வர்யாவும் தேஜஸ்வரும் நன்றாக வாழ்ந்து வந்த சூழல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வேலைக்கு சென்ற தேஜேஸ்வர் இரவு வெகு நேரம் ஆகியும் வீட்டிற்கு வராமல் இருந்துள்ளார். இதனால் பதற்றமடைந்த பெற்றோர்களை மற்றும் அவர்களது உறவினர்கள் தேஜஸ்வரை தேடியுள்ளனர். எங்கு தேடியும் தேஜஸ்வர் கிடைக்கவில்லை. அப்போது தேஜேஸ்வர் வழக்கமாக டீ குடிக்க செல்லும் டீக்கடைக்காரர் அவர் சிலருடன் காரில் சென்றதாக கூறியுள்ளார்.
காரின் அடையாளங்களை வைத்து உறவினர்கள் அந்த காரை தேட தொடங்கியுள்ளனர். அப்போது அதே பகுதியில் இருந்த ஒரு ஏரியின் அருகில் அந்த கார் நின்றிருப்பதை கவனித்து அருகில் சென்று பார்த்துள்ளனர். ஆனால் கார் யாரும் இல்லாமல் நின்றிருந்துள்ளது. ஏரியில் யாரோ ஒருவர் மிதந்து கொண்டிருந்த நிலையில் சற்று பயத்துடன் தேஜஸ்வரின் உறவினர்கள் அருகில் சென்று பார்த்துள்ளனர்.
இந்நிலையில் அங்கு தேஜஸ்வர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ஏரியில் பிணமாக கிடந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் போலீசில் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தேஜஸ்வரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி உள்ளனர்.
தேஜஸ்வரின் குடும்பத்தாரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் அனைவரும் பதிலளித்த நிலையில், தேஜஸ்வரின் மனைவி மட்டும் போலீசார் கேட்ட கேள்விகளுக்கு முன்னுக்கு பின்னாக பதிலளித்துள்ளார். இதில் சந்தேகமடைந்த போலீசார் ஐஸ்வர்யாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளன.
ஐஸ்வரியாவின் தாயான சுஜாதா ஒரு தனியார் வங்கியில் துப்புரவாளராக பணி புரிந்து வருகிறார். அதே வங்கியில் மேலாளராக பணிபுரியும் திருமலா ராவ் என்பவருக்கும் சுஜாதாவிற்கு தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இதனால் திருமலா ராவ் அடிக்கடி சுஜாதாவை பார்க்க அவரது வீட்டிற்கு சென்று வந்துள்ளார். அப்போது ஐஸ்வர்யாவுடனும் திருமலா ராவிற்கு தகாத உறவு ஏற்பட்டுள்ளது.
பெற்றோர்கள் கூறியதால் தேஜஸ்வரை திருமணம் செய்து கொண்ட ஐஸ்வர்யா, திருமலா ராவுடன் சேர்ந்து வாழ முடிவு செய்து, திருமலா ராவுடன் சேர்ந்து திட்டம் போட்டு கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்துள்ளார். திருமலா ராவிற்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து ஐஸ்வர்யாவின் வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து ஐஸ்வர்யா, திருமலா ராவ் மற்றும் கூலிப்படையை சேர்ந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கணவரை திருமணம் ஆனா மூன்று வாரங்களில் மனைவி கூலிப்படை வைத்து கொன்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.