
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அருகே முடிச்சூர் பகுதியை சேர்ந்தவர் 46 வயதுடைய ராமகிருஷ்ணன். இவர் காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த ஆதனூர் சாலையில் ஹார்டுவர்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். படைப்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடக்கும் கட்டுமான பணிகளுக்கும் அதே பகுதியில் உள்ள கட்டுமான நிறுவனத்திற்கும் மணல், ஜல்லி, கம்பி போன்ற கட்டுமான பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கரசங்கால் பகுதியை சேர்ந்த குன்றத்தூர் ஒன்றிய அதிமுக இளைஞர் பாசறை துணை தலைவர் தினேஷ் ராமகிருஷ்ணனிடம் “நீ வேறு எங்காவது உனது பொருட்களை விற்பனை செய்து கொள் இங்கு உனது கடை இனிமேல் செயல்படக் கூடாது” என கூறியுள்ளார். ஆனால் தொடர்ந்து ராமலிங்கம் கடை நடத்தி பொருட்களை விற்பனை செய்து வந்த நிலையில் தினேஷ் அவரை மறைமுகமாக மிரட்டி வந்துள்ளார்.
ஒரு கட்டத்திற்கு பிறகு ஆத்திரமடைந்த தினேஷ் ராமகிருஷ்ணனுக்கு போன் செய்து “இது என்னுடைய ஏரியா இங்கு நான் மட்டும் தான் கட்டுமான பொருட்களை விற்பனை செய்யுவேன் அதையும் மீறி நீ விற்பனையில் ஈடுபட்டால் உன்னை கொலை செய்து விடுவேன்” என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவருக்கு வரும் சில வாடிக்கையாளர்களையும் வரவிடாமல் தடுத்ததாக சொல்லப்படுகிறது.
இதனால் ராமகிருஷ்ணன் “தன்னை கடை நடத்த கூடாது எனவும் கொலை செய்து விடுவதாகவும்” மிரட்டியதாக மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் தினேஷ் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.