“நீ என் பொண்டாட்டி கூட ஓடுனப்போ எனக்கும் இப்படித்த வலிச்சது” - மனைவியின் கள்ளக்காதலனை நடுரோட்டில் கத்திரியால் குத்திய கணவன்!

தொடர்ந்து இருவரும் அடிக்கடி வெளியில் சென்று தனிமையில் இருந்து..
“நீ என் பொண்டாட்டி கூட ஓடுனப்போ எனக்கும் இப்படித்த வலிச்சது” - மனைவியின் கள்ளக்காதலனை நடுரோட்டில் கத்திரியால் குத்திய கணவன்!
Published on
Updated on
2 min read

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி அடுத்துள்ள ஆனைமலை அண்ணா நகரை சேர்ந்தவர் 27 வயதுடைய கூலி தொழிலாளி ராஜா. இவர் அதே பகுதியியை சேர்த்த சந்தானகிருஷ்ணன் என்பவரிடம் கடனாக ஒரு குறிப்பிட்ட தொகையை பெற்றுள்ளார். தொடர்ந்து மாத மாதம் அந்த கடனுக்கான வட்டியை சந்தான கிருஷ்ணன் வீடு தேடு வந்து செலுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது. சந்தானகிருஷ்ணனுக்கு அதே பகுதியை சேர்ந்த 29 வயதுடைய பெண்ணான கிருஷ்ணவேணி என்பவருடன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று இருவரும் தனியாக வசித்து வந்திருக்கின்றனர்.

அப்போது சந்தான கிருஷ்ணனிடம் மாத மாதம் வட்டி தொகையை செலுத்த சென்ற ராஜாவுக்கும் கிருஷ்ணனின் மனைவியான கிருஷ்ணவேணிக்கு இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. அதனை தொடர்ந்து இருவரும் அடிக்கடி வெளியில் சென்று தனிமையில் இருந்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனை அறிந்த சந்தான கிருஷ்ணன் அவரது மனைவி மற்றும் ராஜாவை கண்டித்திருக்கிறார்.

ஆனால் கள்ளக்காதலை கைவிடாத இருவரும் சேர்ந்து கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு யாருக்கும் தெரியாமல் ஊரை விட்டு ஓடி உள்ளனர். மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்றதால் மன உளைச்சல் அடைந்த சந்தான கிருஷ்ணன் அவரது மனைவியை கண்டுபிடித்து தருமாறு போலீசில் புகாரளித்திருக்கிறார். இந்த நிலையில் நேற்று ஆனைமலை மாசாணி அம்மன் குண்டம் திருவிழா நடைபெற்ற நிலையில் ராஜா மற்றும் கிருஷ்ணவேணி வந்திருப்பதாக சந்தான கிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்துள்ளது.

Admin

இதையடுத்து ஆனைமலை கோவிலுக்கு சென்ற சந்தான கிருஷ்ணன் ராஜாவை தேடி வந்த நிலையில் நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் அருகே இருந்த ராஜாவை பார்த்து ஆத்திரமடைந்து கிருஷ்ணன். கத்திரிக்கோலுடன் ராஜாவிடம் சென்று அவரை கீழே தள்ளி ஐந்து இடங்களில் சரமாரியாக குத்தியுள்ளார். மேலும் “நீ என் பொண்டாட்டி கூட ஓடுனப்போ எனக்கும் இப்படி தான் வலிச்சது” என கூறி அடித்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சந்தான கிருஷ்ணனை கைது செய்து படுகாயம் அடைந்த ராஜாவை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சந்தானகிருஷ்ணனை ஆனைமலை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராஜாவை சந்தானகிருஷ்ணன் கத்தியால் குத்தி கீழே தள்ளிய வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com