“கள்ளக்காதலனோடு உல்லாசத்தில் இருந்த மனைவி” - ஹோட்டல் அறையில் வைத்தே கையும் களவுமாக பிடித்த கணவன்… அடுத்து நடந்த தரமான சம்பவம்!

கள்ளக்காதலனுடன் வாழ வேண்டும் என முடிவு செய்த பிரியா கணவர் தன்னை கொடுமை படுத்துவதாக...
“கள்ளக்காதலனோடு உல்லாசத்தில் இருந்த மனைவி” - ஹோட்டல் அறையில் வைத்தே கையும் களவுமாக பிடித்த கணவன்… அடுத்து நடந்த தரமான சம்பவம்!
Published on
Updated on
1 min read

உத்தரபிரதேச மாநிலம், புலந்த்ஷர் உள்ள குலாவ்தி பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ் குமார். இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிரியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவரும் தனியாக வீடு எடுத்து வசித்து வந்த நிலையில் ஆகாஷ் குமார் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி குடும்பத்தை காப்பாற்றி வந்திருக்கிறார். எனவே ஆகாஷ் குமார் வேலைக்கு சென்ற பின்னர் பிரியா மட்டும் தனியாக வீட்டில் இருந்திருக்கிறார்.

இந்த நிலையில் பிரியாவிற்கு அவரது வீட்டிற்கு அருகில் வசித்து வரும் நிகில் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. இதனை தொடர்ந்து இருவரும் அடிக்கடி வெளியில் சென்று வந்த நிலையில் மனைவியின் கள்ளக்காதல் பற்றி அறிந்த ஆகாஷ் குமார் பிரியாவை நிகில் உடனான உறவை கைவிட சொல்லி கண்டித்திருக்கிறார்.

Admin

ஆனால் தொடர்ந்து பிரியா நிகிலுடன் பழகி வந்த நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. எனவே கள்ளக்காதலனுடன் வாழ வேண்டும் என முடிவு செய்த பிரியா கணவர் தன்னை கொடுமை படுத்துவதாகவும், வரதட்சணை கேட்டு அடித்து துன்புறுத்தியதாகவும் காவல் துறையினரிடம் புகாரளித்திருக்கிறார். இந்த வழக்கு தற்போது விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் ஆகாஷ் குமார் மனைவியை பிரிந்து தனது அக்கா வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் பிரியா தனது கள்ளக்காதலனுடன் அலிகார் பகுதியில் உள்ள ஹோட்டலுக்கு சென்றிருக்கிறார். இந்த தகவல் அறிந்த ஆகாஷ் குமார் அங்கு சென்று பார்த்தபோது இருவரும் தனிமையில் இருந்த நிலையில் உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பிரியா மற்றும் நிகிலை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்காதலனுடன் உல்லாசத்தில் இருந்த மனைவியை கணவன் கையும் களவுமாக பிடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com