

கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 40 வயதுடைய சிஜு. இவருக்கும் கர்நாடக மாநிலம் வீராஜ் பேட்டை பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய மல்லிகா என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு உள்ளதாக சொல்லப்படும் நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் இருவரும் அவ்வப்போது கோபித்துக்கொண்டு வெளியூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விடுவதை வழக்கமாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த மாதம் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான தகராறு காரணமாக விரக்தியடைந்த மல்லிகா தனது குழந்தைகளுடன் நீலகிரி மாவட்டம் பந்தலூரில் வசிக்கும் தனது சித்தி பாக்கியலட்சுமியின் வீட்டிற்கு சென்று தங்கி இருந்துள்ளார். நீண்ட நாட்களாகியும் திரும்ப வராததால் மனைவியை சமாதானப்படுத்தும் நோக்கில் சிஜு அங்கு சென்று அவரை மீண்டும் குடும்பத்துடன் சேர்ந்து வாழ அழைத்ததாக தெரிகிறது. அதற்கு மல்லிகா அளித்த நிலையில் இருவரும் சேர்ந்து குழந்தைகளுடன் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மேப்பாடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று வந்துள்ளனர்.
இதையடுத்து, நேற்று மாலை அவர்கள் காரில் பந்தலூருக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது கார் மேங்கோ ரேஞ்ச் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது தம்பதியருக்கு இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த வாக்குவாதம் தீவிரமடைந்த நிலையில், ஆத்திரமடைந்த சிஜு காரில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குழந்தைகள் கண்முன்னே மல்லிகாவின் இரு கால்களிலும் சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் மல்லிகா பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் தவித்த நிலையில் மல்லிகாவின் அலறல் சத்தம் கேட்ட அப்பகுதியாக சென்ற பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் உடனடியாக உதவி செய்து, காயமடைந்த மல்லிகாவை மீட்டுள்ளனர்.
தொடர்ந்து மருத்துவ சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த மேங்கோரேஞ்ச் போலீசார் உடனடியாக விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர், மனைவியை கத்தியால் தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்ட சிஜுவை கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். குடும்ப தகராறு காரணமாக நடைபெற்ற இந்த தாக்குதல் சம்பவம் நீலகிரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.