சேத்தியாத்தோப்பு கட்டுக்கரையில் மனைவி கள்ளக்காதலனுடன் சென்றதால் கணவர் வீடியோ வெளியிட்டு வேதனையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு கட்டுக்கரையை சேர்ந்தவர் இளவரசன்((38). இவர் வெளிநாட்டில் தங்கி 4 வருடம் வேலை செய்துவந்துள்ளார். இவருக்கு மகேஸ்வரி (30) என்பவரோடு திருமணமாகி ஒரு பெண் பிள்ளை இருக்கிறது. இந்நிலையில் இளவரசன் வெளிநாட்டில் கஷ்டப்பட்டு தான் சம்பாதிக்கும் ரூ. 25,000 பணத்தை அப்படியே வீட்டிலுள்ள மனைவி மகேஸ்வரிக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில் நன்றாக போய்க்கொண்டிருந்த இவர்களது திருமணவாழ்வில் இளவரசன் வெளிநாட்டிலிருந்து வீட்டிற்கு வந்தபோது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது.
மனைவிக்கு வேறு ஒருவரோடு தொடர்பு இருப்பதைக்கண்டு, கண்டித்து குடும்பம் நடத்த அழைத்துள்ளார். இது குறித்து காவல் நிலையத்தில் புகாரும் முன்பு அளித்து அவருடன் வாழ்ந்துள்ளார். காவல்துறையினர் மகேஸ்வரியிடம் விசாரணைசெய்தும் இது முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில் இளவரசன் கடும் மன உளைச்சலிலும், வேதனை அடைந்துள்ளார். இந்நிலையில், மகேஸ்வரி அவரது கணவர் இளவரசன் சம்பாதித்த பணத்தை எடுத்துக்கொண்டு வேறு ஒருவருடன் சென்றுள்ளார். இது குறித்து, கிட்டத்தட்ட 7 நிமிட வீடியோ ஒன்றினை இளவரசன் வெளியிட்டுள்ளார். "எனது சாவுக்கு காரணம் எனது மனைவி, எனது மனைவியிடம் பழகும் ஆண், மற்றும் இரண்டு பெண்கள் என நான்கு நபர்களே" என்று கூறியுள்ளார். "இதன் பிறகு எனக்கு வேறு ஒருத்தி கிடைக்கமாட்டாள், கிடைத்தாலும் எனக்கு வேண்டாம். ஒருத்திக்கு ஒருவனாக நான் வாழ்கிறேன்" என்று கண்ணீர் மல்க கூறினார். மேலும், அவரது மனைவியின் கள்ளகாதலனின் பெயர் அஜித் குமார் என்றும், அவர் விழுப்புரம் பகுதியை சேர்ந்தவர் என்றும் கூறியுள்ளார். மேலும், இவர்கள் இருவரும் தான் 'சவுதி அரேபியா'வில் இருந்து வந்ததும் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளனர் என்றும் இதற்கு முழுக் காரணமும் மகேஸ்வரி தாயார் அஞ்சலை மற்றும் மணிமேகலை என்ற பெண் இவர்களை சிறையில் அடைக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும், இதைக்கான தான் இல்லாவிட்டாலும், வெளிநாட்டில் வேலை செய்யும் யாருக்கும் இதுபோன்று நடக்கக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார். சுமார் 7 நிமிட வீடியோவை வெளிட்ட பின்னர் இளவரசன் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் வேதனையையும் ஏற்படுத்தி வருகிறது. மேலும், இறந்த இளவரசன் உடலைக்கைப்பற்றி சேத்தியாத்தோப்பு போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.