

குடும்பத் தகராறு காரணமாக மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, உடலை வாடகை அறையில் மறைத்து வைத்து விட்டு தப்பிச் சென்றதாக கூறப்படும் 24 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூருவின் கும்பல்கோடு பகுதியில் நடந்த இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொலை செய்தவர பீகாரை செய்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.
பீகாரைச் சேர்ந்த தீராஜ் குமார் என்பவருக்கும், ரீமா குமாரி என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டதாகவும், சுமார் 10 மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்துகொண்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். ரீமாவின் குடும்பத்தினருக்குத் தெரிவிக்காமல் திருமணம் செய்துகொண்ட இவர்கள், பின்னர் வேலைக்காக பெங்களூருவுக்கு குடிபெயர்ந்து, கும்பல்கோடு எனும் பகுதியில் வாடகை அறை எடுத்து வசித்து வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக, ரீமா வீட்டில் பெரும்பாலான நேரத்தை போனிலும் ரீல்ஸ் போடுவதிலும் செலவழிப்பதாகவும், தன்னுடன் தாம்பத்திய உறவில் இருக்க விருப்பம் காட்டவில்லை என்றும் தீராஜ் விசாரணையின்போது தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், மாணவி ரீமா தனக்கு மட்டும் உணவு சமைத்துக் கொள்வதாகவும், தீராஜ் வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பிய பிறகு அவருக்கு உணவு பரிமாறுவதில்லை என்றும் தீராஜ் போலீசாரிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபோன்ற பிரச்சினைகள் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில், ரீமா மீண்டும் பீகாருக்கு செல்ல வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். இதனால் குடும்ப உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜூலை 25ஆம் தேதி தீராஜ் வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பியபோது, வீட்டில் சமைக்காமல் இருந்துள்ளார் ரீமா. இதையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அந்த வாக்குவாதம் முற்றியாதவும் கூறப்படுகிறது. பின்னர் தீராஜ், ரீமாவை படுக்கைக்குச் செல்லுமாறு கூறியதாகவும், அதற்கு அவர் மறுத்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது ரீமா மரக்குச்சியால் தீராஜைத் தாக்கியதாகவும், இதனால் ஆத்திரமடைந்த தீராஜ், ரீமா அணிந்திருந்த முக்காட்டை பயன்படுத்தி அவரது கழுத்தை நெரித்த கொலை செய்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. உயிரிழந்த ரீமாவின் உடலை மறைக்கும் நோக்கில் அவரது முகத்தை பிளாஸ்டிக் கவரால் சுற்றி, உடலை பெட்ஷீட்டில் சுற்றி வாடகை அறைக்குள் வைத்துவிட்டு தீராஜ் அங்கிருந்து தப்பிச் சென்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் நடந்த நான்கு நாட்களுக்குப் பிறகு, அதாவது ஜூலை 29ஆம் தேதி இந்த கொலை சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தம்பதியினர் வசித்து வந்த அறையில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியதாக ரீமாவின் அறிமுகமான ஒருவர் ஹவுஸ் ஓனரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அறைக்குச் சென்ற உரிமையாளர், கழிப்பறைக்கு அருகே பெட்ஷீட்டில் சுற்றப்பட்ட நிலையில் ரீமாவின் அழுகிய உடல் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கும்பல்கோடு போலீசார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், கொலை மற்றும் சில பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
கொலைக்குப் பிறகு தீராஜ் குமார் தனது சொந்த மாநிலமான பீகாருக்கு தப்பிச் சென்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரைத் தேடும் பணியில் ஈடுபட்ட போலீசார், பீகாரில் அவரைக் கண்டுபிடித்து கைது செய்தனர். அதையடுத்து விசாரணைக்காக அவரை பெங்களூருக்கு அழைத்து வந்தனர். விசாரணையின்போது, ரீமாவைக் கொலை செய்ததாக தீராஜ் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். எனினும், இந்த ஒப்புதல் வாக்குமூலத்தின் முழுமையான சட்டப்பூர்வ நிலை நீதிமன்ற விசாரணை மற்றும் ஆதாரங்களின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும்.
இந்த வழக்கில் கொலைக்கான காரணம், சம்பவத்தின் முழுமையான பின்னணி உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சம்பவம் தொடர்பான அறிவியல் தடயங்கள், சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட ஆதாரங்களையும் புலனாய்வாளர்கள் சேகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காதலித்து திருமணம் செய்துகொண்ட தம்பதியினருக்குள் ஏற்பட்டதாகக் கூறப்படும் தொடர்ச்சியான குடும்பத் தகராறு இறுதியில் கொலையில் முடிந்திருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.