“மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன்” - அடுத்த நொடியே நடந்த அதிர்ச்சி சம்பவம்… பூட்டிய வீட்டுக்குள் இருந்து மீட்கப்பட்ட சடலங்கள்!

இதனால் ஆத்திரமடைந்த செந்தில்குமார், வீட்டில் இருந்த அரிவாளால் மனைவி சத்யாவை வெட்டிக் கொலை...
“மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன்” - அடுத்த நொடியே நடந்த அதிர்ச்சி சம்பவம்… பூட்டிய வீட்டுக்குள் இருந்து மீட்கப்பட்ட சடலங்கள்!
Published on
Updated on
2 min read

திருப்பூர் மாவட்டம், டி.கே.டி மில் பகுதியில் உள்ள சக்தி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் 43 வயதுடைய செந்தில்குமார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 41 வயதுடைய சத்யா என்ற பெண்ணுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு தற்போது 15 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் அவர் அருகில் உள்ள தனியார் பள்ளியில் பதம் வகுப்பு படித்து வருகிறார். செந்தில் குமார் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருவதோடு வாவி பாளையத்தில் விவசாய நிலம் ஒன்று வைத்து விவசாயமும் செய்து வந்திருக்கிறார்.

கடந்த சில வருடங்களாகவே கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்த நிலையில் இது சில மாதங்களுக்கு முன்பு வாக்குவாதமாக முற்றியுள்ளது. தொடர்ந்து கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் உறவினர்கள் இருவரையும் சமாதானம் செய்து சேர்த்து வைத்திருக்கின்றனர். செந்தில்குமாரின் மகள் நேத்ரா அவ்வப்போது அவர்களது தோட்டத்திற்கு சென்று அங்குள்ள பண்ணை வீட்டில் தங்கி மறுநாள் வீடு திரும்புவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்.

அதே போல் நேற்று முன்தினம் அவர்களது பண்ணை வீட்டிற்கு சென்ற நேத்ரா இரவு அங்கேயே தங்கி இருந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் இந்த வாக்குவாதம் முற்றி தகராறாக மாறியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த செந்தில்குமார், வீட்டில் இருந்த அரிவாளால் மனைவி சத்யாவை வெட்டி கொலை செய்துள்ளார். பின்னர் சத்யாவை கொலை செய்து விட்டோமே என்ற மன உளைச்சலில் இருந்த செந்தில் தோட்டத்தில் உள்ள தென்னை மரங்களுக்கு பயன்படுத்த வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டு, மனைவியின் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Admin

இதற்கிடையில் அவர்களது குடும்ப whatsapp குரூப்பில் “நான் என் மனைவியை வெட்டி கொலை செய்துவிட்டேன். அவள் இல்லாமல் என்னால் வாழ முடியாது அதனால் நனையும் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொள்கிறேன்” என் பேசிய வீடியோ ஒன்றை அனுப்பி வைத்திருக்கிறார். இந்த நிலையில் whatsapp குரூப்பில் இருந்த வீடியோவை இன்று காலை பார்த்த உறவினர் ஒருவர் செந்தில் குமார் வீட்டிற்கு சென்று பார்த்த போது வீடு உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது அதனால் வீரபாண்டிய போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, சத்யா அரிவாளால் வெட்டப்பட்ட நிலையிலும், செந்தில்குமார் தூக்கில் தொங்கி உயிரிழந்த நிலையிலும் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் செந்தில் குமார் அறையில் இருந்த தற்கொலை கடிதத்தை கைப்பற்றி, இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com