"சென்னையில்.. ஐசிஎப் இன்ஜினியர் பலி" - சாலையில் திடீரென முறிந்து விழுந்த மரத்தால் விபத்து

சுமார் இரவு 7.30 மணியளவில் நியூ ஆவடி சாலை மற்றும் ஐசிஎப் சாலை சந்திப்பு வழியாக
"சென்னையில்.. ஐசிஎப் இன்ஜினியர் பலி" - சாலையில் திடீரென முறிந்து விழுந்த மரத்தால் விபத்து
Published on
Updated on
1 min read

சென்னையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது சாலையில் இருந்த மரம் விழுந்து ஐசிஎப் சீனியர் இன்ஜினியர் பலி

சென்னை கொரட்டூர் சிவலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயவேல் (59). இவர் சென்னை ஐபிஎப் ரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில் சீனியர் செக்ஸ்சன் இன்ஜினியராக பணி புரிந்து வருகிறார்.

இன்று மாலை ஜெயவேல் வேலை நிமித்தமாக அண்ணா நகருக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிந்த அவர், சுமார் இரவு 7.30 மணியளவில் நியூ ஆவடி சாலை மற்றும் ஐசிஎப் சாலை சந்திப்பு வழியாக வந்து கொண்டிருந்த உள்ளார். அப்போது சாலையோரம் இருந்த பெரிய மரம் ஒன்று திடீரென முறிந்து இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த ஜெயவேல் மீது விழுந்ததுள்ளது. 

இதில் பலத்த காயமடைந்த இன்ஜினியர் ஜெயவேல் சம்பவயிடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.‌ பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் ஐபிஎப் போலீசார் விரைந்து சென்று ஜெயவேல் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com