"அவளுக்கு என்கூட தொடர்பு இருக்கு" காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம்.. ஊர் முழுவதும் சுவரொட்டி ஒட்டி காதலன் செய்த செயல்!

பெண்ணின் குடும்பத்தினர் தங்கலபள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஒருவருடன் அவருக்குத் திருமணம் நிச்சயித்த காரணத்தால் வெங்கடேஷ் கோபமடைந்துள்ளார்.
Telangana man arrested
Telangana man arrestedTelangana man arrested
Published on
Updated on
2 min read

தெலங்கானாவைச் சேர்ந்த பயண முகவர் நிறுவனமான டோட்லா வெங்கடேஷ், ஒரு பெண்ணைக் காதலித்துள்ளார். ஆனால் அப்பெண்ணின் குடும்பத்தினர், வேறு கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்துள்ளனர். இதனால் மனமுடைந்த அந்த நபர், அப்பெண் தனக்கு கிடைக்கவில்லை என்றால் யாருக்கும் கிடைக்கக்கூடாது என்ற எண்ணத்தில் அவரது திருமணத்தை முறிப்பதற்காக, அந்த நபர் ஒரு திட்டத்தைத் தீட்டியுள்ளார். அந்த பெண்ணுடன் தனக்கு உறவு இருப்பதாகக் கூறி, அவதூறான சுவரொட்டிகளை கிராமங்கள் முழுவதும் ஒட்டியுள்ளார்.

கடந்த ஜூலை 7 ஆம் தேதி இரவு, ராஜண்ணா-சிரசில்லா மாவட்டத்தின் தங்கலபள்ளி கிராமத்திலும், சித்திப்பேட் மாவட்டத்தின் என்சன்பள்ளி கிராமத்திலும் பல்வேறு இடங்களில் வெங்கடேஷ் மற்றும் அவரது நண்பர்கள் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.

காவல்துறையின் தகவல்படி, துப்பாக் மண்டலம், பெத்தகுண்டவெல்லி கிராமத்தைச் சேர்ந்த 29 வயதான தொட்டலா வெங்கடேஷ், இவர் என்சன்பள்ளியைச் சேர்ந்த ஒரு பெண்ணை சில காலமாக காதலித்து வந்துள்ளார். மேலும், அந்த பெண்ணின் குடும்பத்தினர் தங்கலபள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஒருவருடன் அவருக்குத் திருமணம் நிச்சயித்த காரணத்தால் வெங்கடேஷ் கோபமடைந்துள்ளார். திருமணத்தை நிறுத்தவும், காதலி தனக்கு கிடைக்காத விரக்தியிலும் அவர் திட்டம் தீட்டியதாகக் கூறப்படுகிறது," என்று சித்திப்பேட் கோட்டத்தின் உதவி காவல் ஆணையர் ரவீந்தர் தெரிவித்துள்ளார்.

இதனால், வெங்கடேஷ் அந்தப் பெண்ணின் புகைப்படத்தைப் பெற்று, அவருடன் தனக்கு உறவு இருப்பதாகக் கூறி ஆட்சேபனைக்குரிய சுவரொட்டிகளைத் தயாரித்துள்ளார். அவர் தனது நண்பர்களின் உதவியுடன் சுவரொட்டிகளை அச்சிட்டு, தங்கலபள்ளி மற்றும் என்சன்பள்ளி கிராமங்களில் பல இடங்களில் ஒட்டினார், என்று ஏசிபி தெரிவித்துள்ளார்.

கிராம மக்களிடையே அவர் ஒட்டிய சுவரொட்டிகள் வைரலான பிறகு, அப்பெண்ணின் குடும்பத்தினர் காவல்துறையை அணுகியுள்ளனர்.

அந்த பெண்ணின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், சித்திப்பேட் மூன்று நகர காவல்துறையினர், பாரதிய நியாய சம்ஹிதாவின் (பிஎன்எஸ்) தொடர்புடைய பிரிவுகளின் கீழ், அதாவது துன்புறுத்தல், அச்சுறுத்தல், அவதூறு மற்றும் பொது நோக்கம் தொடர்பான விதிகள் உட்பட, ஒரு வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட வெங்கடேஷ், குற்றாலகோண்டியைச் சேர்ந்த பன்னி என்ற வன்னேலா அஸ்விட் குமார், பக்ரிசெப்யாலைச் சேர்ந்த பாண்டி பானு பிரசாத் மற்றும் அவரது மனைவி ரேகா, ராமஞ்சாவைச் சேர்ந்த புருஜுகிண்டி ஈஸ்வர், சித்திபேட்டையைச் சேர்ந்த ராஜ்போய்னா நவீன் குமார் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

விசாரணையின் போது, ​​குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களது ஈடுபாட்டை ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட கைபேசிகள், சுவரொட்டிகளை ஒட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் அச்சிடப்பட்ட பொருட்கள் ஆகியவற்றை காவல்துறை பறிமுதல் செய்துள்ளனர். ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கத்தைப் பரப்புவதற்கு எதிராக அச்சுக்கூட உரிமையாளர்களையும் சமூக ஊடகப் பயனர்களையும் காவல்துறை எச்சரித்துள்ளது.

பெண்களுக்கு எதிரான அவதூறுப் பொருட்களை அச்சிடுவதோ அல்லது பகிர்தலோ சட்ட நடவடிக்கைக்கு வழிவகுக்கும். அச்சிடும் நிறுவனங்கள் எந்தவொரு சுவரொட்டியையோ அல்லது பொருளையோ வெளியிடுவதற்கு முன்பு அதன் உள்ளடக்கத்தைச் சரிபார்க்க வேண்டும், என்று காவல்த்துறை தரப்பில் மேலும் கூறப்பட்டுள்ளது. மேலும், இவ்வழக்கு குறித்த மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com