"பல ஆண்களால் சீரழிக்கப்பட்ட பெண்" - பணத்திற்காக விபச்சாரத்திற்கு தள்ளிய இருவர்! சமூகவலைத்தள நட்பு விபரீதமானது எப்படி?

இரண்டு நாட்களுக்குப் பணத்திற்காக பல ஆண்களுடன் பாலியல் உறவு கொள்ளும்படி அந்த பெண் கட்டாயப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
New Jersey woman kidnapping
New Jersey woman kidnapping
Published on
Updated on
2 min read

நியூ ஜெர்சியைச் சேர்ந்த பெண் ஒருவரை இரண்டு பேர் கடத்தி பல மாதங்களாக பல ஆண்களுக்கு இரையாக்கிய நிலையில், அந்த பெண் தப்பித்ததால் இந்த கொடூர நிகழ்வு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்த பெண்ணிடம் ஒத்துழைக்க மறுத்தால் அவரது குடும்பத்தினரை கொலை செய்யப்பட்டுவிடுவதாக மிரட்டியதாக அந்தப் பெண் கூறியுள்ளார்.

நீதிமன்றங்களின் ஆவணங்களின் படி, பாதிக்கப்பட்ட அந்த பெண் பிரவுன்-மில்லர் மற்றும் ஸ்மித் ஆகியோரை முதலில் சமூக ஊடகங்கள் மூலம் சந்தித்துள்ளார். ஆரம்பத்தில் அவர்களை நண்பர்களாக அந்த பெண் கருதியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பிலடெல்பியாவில் நடந்த ஒரு வீட்டு விருந்தின்போதுதான் நிலைமையே தலைகீழாக மாறியதாக அவர் தெரிவிதித்துள்ளார். அந்த விருந்தில், “மியர்” என்று அந்த பெண் அறிந்திருந்த பிரவுன்-மில்லர், தான் கூறுவதை செய்ய மறுத்தால் அவரது குடும்பத்தைக் கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளார்.

இந்நிலையில், 7-எலவன் என்ற கடைக்கு வெளியே அந்தப் பெண் நின்றுகொண்டிருந்தபோது, ​​கருப்பு நிறக் கண்ணாடிகள் பொருத்தப்பட்ட ஒரு கருப்புக் கார் வந்து அவர் முன்பு நின்றதாகவும், அதன் முன்பக்க இருக்கையில் பிரவுன்-மில்லர் அமர்ந்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்னொரு நபர் காரை ஓடியுள்ளார். மேலும், பிரவுன்-மில்லர் கைத்துப்பாக்கி வைத்திருந்ததாகவும், மீண்டும் தன்னை மிரட்டியதாகவும் அந்த பெண் குறிப்பிட்டுள்ளார். இதனால் அச்சமடைந்த அந்த பெண் காரில் ஏறியுள்ளார். இதனையடுத்து, அந்த பெண் பிலடெல்பியாவில் உள்ள ஒரு 'ஹாலிடே இன்' விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அந்த இடத்திற்கு வந்த பின்னர், அடுத்த இரண்டு நாட்களுக்குப் பணத்திற்காக பல ஆண்களுடன் பாலியல் உறவு கொள்ளும்படி அவர் கட்டாயப்படுத்தப்பட்டதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். பின்னர், அந்த பெண் 8 மோட்டலுக்கு வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டதுடன் அவர்களுடனும் பாலியல் உறவு கொள்ளும் படி கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

2025-ம் ஆண்டு ஜூலை முதல் அக்டோபர் வரை, அந்த இரண்டு குற்றவாளிகளும் செர்ரி ஹில், அட்லாண்டிக் சிட்டி, குளோசெஸ்டர் சிட்டி மற்றும் பிலடெல்பியா வழியாக மிரட்டி கடத்தப்பட்ட பல பெண்களை இடம் மாற்றி, வணிக ரீதியாக பாலியல் கடத்தல் நடவடிக்கையை நடத்தியதாக அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும், பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் 18 வயதுக்குட்பட்ட சிறுமியும் ஒருவர் என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும்,பிரவுன்-மில்லர் அந்த பெண்ணின் தொலைபேசியைப் பறிமுதல் செய்து, அவரை விபச்சாரத்திற்கு தள்ளும் வகையில், அவரை குறித்த விளம்பரங்களை இணையத்தில் வெளியிட்டதாகவும் ஆவணங்கள் தெரிவிக்கின்றன. அந்த சமயத்தில்தான் அந்த பெண் ஒரு வாடிக்கையாளரிடம் அந்தப் பயங்கரமான சம்பவத்தினை குறித்து தெரிவித்துள்ளார். இதனால் அந்த பெண்ணுக்கு தப்பிப்பதற்கான வாய்ப்பு கிடைத்ததாக கூறப்படுகிறது. ஆனால், அது கைகொடுக்கவில்லை. இதனையடுத்து ஒரு கட்டத்தில், அந்தப் பெண்ணின் கைபேசி திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் அங்கிருந்து செல்ல அனுமதிக்கப்படவில்லை என்றும், மீறினால் பிரவுன்-மில்லர் சுட்டுக் கொன்றுவிடுவார் என்றும் மிரட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால், அதற்காக அந்த பெண் அஞ்சிவிடவில்லை. மாறாக, அந்தப் பெண் துணிந்து யாருக்கும் தெரியாமல் இணையத்தில் ஒரு வாகனத்தினை முன்பதிவு செய்துவிட்டுத் தப்பிச் செல்ல முயன்றுள்ளார். ஆனால், அந்த பெண் தப்பிச் செல்வதற்குள் ஸ்மித் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. அதனால் ஏற்பட்ட சண்டையானது மோட்டல் அறைக்கு வெளியே படிக்கட்டுகள் வரை நீடித்ததாக கூறப்படுகிறது. சத்தம் கேட்டு அங்கு வாசித்த மற்றவர்கள் இந்த பிரச்சனையில் தலையிட்டு காவல்துறையை அழைத்ததாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

அதன் பின்னர், அங்கு வந்த அதிகாரிகள் அந்தப் பெண்ணைக் கண்டுபிடித்து, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மேலும் நீதிமன்ற ஆவணங்களின்படி, புலனாய்வாளர்கள் சம்பவ இடத்திலிருந்து போதைப்பொருட்கள் மற்றும் நான்கு கைபேசிகளை மீட்டுள்ளனர்.

தற்போது, ​​கடத்தல்காரர்கள் எனக் கூறப்படும் அந்த இருவர் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக நியூ ஜெர்சி தலைமை வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பிலடெல்பியாவைச் சேர்ந்த டாமியர் பிரவுன்-மில்லர் மற்றும் நியூ ஜெர்சியின் காலிங்ஸ்வுட்டைச் சேர்ந்த டெஸரீ ஸ்மித் ஆகியோர் மீது ஆட்கடத்தல், மனிதக் கடத்தல், சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுதல் மற்றும் விபச்சாரத்தை ஊக்குவித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com