"என் கணவனோடு உடலுறவு வைத்துக்கொள்.. உனக்கு வெகுமதிகள் தருகிறேன்" - கணவன் மனைவியால் பணிப்பெண்ணுக்கு நடந்த கொடூரம்!

தனக்கு குழந்தை இல்லாததால் கணவனோடு உடலுறவு வைக்கச்சொல்லி பணிப்பெண்ணை சித்திரவதை செய்த மனைவி.
"என் கணவனோடு உடலுறவு வைத்துக்கொள்.. உனக்கு வெகுமதிகள் தருகிறேன்" - கணவன் மனைவியால்  பணிப்பெண்ணுக்கு நடந்த கொடூரம்!
Published on
Updated on
2 min read

உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூர் மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம், காவல்துறையினரையே திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. கோரக்பூர் மாவட்டத்தில் ஒரு தம்பதியினர் வசித்து வந்தனர். திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும், இருவருக்கும்குழந்தைகள் இல்லை. அந்த நேரத்தில், மனைவி தன் வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்ணை, தன் கணவருடன் பாலியல் உறவு கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். மேலும், குழந்தை பிறந்தால் நிலம் தருவதாகவும் அவர் வாக்குறுதி அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்கள், காவல்துறையினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

பிரிஜ்பால் சிங் தனது மனைவி சோனியாவுடன் ஷாஹுபூர் பகுதியில் வசித்து வந்தார். திருமணமாகி பல வருடங்களாக சோனியாவுக்குக் குழந்தை இல்லை. இறுதியாக, அந்த தம்பத்தியினர் அதற்கு ஒரு தீர்வினை கண்டுபிடித்தனர். வீட்டு வேலை செய்ய வந்த பணிப்பெண்ணிடம் நிலத்தையும் ஒரு வீட்டையும் தருவதாக ஆசை காட்டியுள்ளனர். அதற்குப் பதிலாக, அந்த பணிப்பெண், தன் கணவருடன் உடலுறவு கொண்டு தங்களுக்கு ஒரு குழந்தையைத் தரவேண்டும் என்றும் நிர்பந்தித்துள்ளனர். இதைக் கேட்டதும், அந்தப் பணிப்பெண் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானார். மேலும், அந்த பணிப்பெண் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அப்பெண்ணின் மறுப்பைக் கேட்ட பிறகு, அந்தத் தம்பதியினர் பெரும் ரகளை செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பணிப்பெண் குஷிநகரைச் சேர்ந்தவர். இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்தபோது அவர் அதிர்ச்சியளிக்கும் தகவல்களை காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். பிரிஜ்பால் சிங் அவரை வீட்டு வேலைக்காக அழைத்துள்ளார். அதற்காக மாதம் ரூ.10,000 தருவதாகவும் அவர் ஒப்புக்கொண்டார். அதன் பிறகு, அவர் பிரிஜ்பாலின் வீட்டிலேயே வாடகைக்கு வசிக்கத் தொடங்கினார். சில நாட்களுக்குப் பிறகு, பிரிஜ்பால் சிங்கின் மனைவி சோனியா, தனக்குக் குழந்தைகள் இல்லை என்றும், அதனால் என் கணவருடன் உடலுறவு கொண்டு, எங்களுக்கு ஒரு குழந்தையைப் பெற்றுக் கொடுத்தால், நாங்கள் உங்களுக்கு நிலம் தருவோம் என்றும் கூறியுள்ளார். இருப்பினும், அந்தப் பணிப்பெண் அதை மறுத்துவிட்டார்.

ஒருநாள் இரவு, சோனியா குடிபோதையில் பணிப்பெண்ணின் அறைக்குள் நுழைந்துள்ளார். மேலும், அந்த பணிப்பெண்ணை கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளார். அதுமட்டுமின்றி, அவரது கணவர் பிரிஜ்பால் சிங்கை வைத்து அவரைத் துன்புறுத்தியுள்ளார். "எங்களுக்கு ஒரு குழந்தையைக் கொடுத்தால், அஜ்மீரில் நிலமும் ஒரு வீடும் தருவோம்" என்று மீண்டும் அப்பெண்ணிடம் கூறியுள்ளார். ஆனால், அவர் மறுத்த பிறகு, அவரது கணவர் அவரை மீண்டும் துன்புறுத்தியிருக்கிறார். மேலும், அந்தச் சம்பவத்தை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார். இதனையடுத்து, பாதிக்கப்பட்ட அந்த பணிப்பெண் அங்கிருந்து தப்பித்து, காவல்துறையினரிடம் புகாரளித்துள்ளார்.

அந்த வீடியோவில், சோனியாவும் பிரிஜ்பால் சிங்கும் அப்பெண்ணை மிரட்டியுள்ளனர். மேலும், அவர் பல நாட்கள் அதே வீட்டில் சிறை வைக்கப்பட்டிருந்தார். அந்த நேரத்தில், பிரிஜ்பால் சிங் அவரைத் தொடர்ந்து சித்திரவதை செய்துள்ளார். தற்போது, அந்தத் தம்பதியினர் தப்பி ஓடி, தலைமறைவாக உள்ளனர். அவர்களைப் பிடித்துத் தருபவர்களுக்குப் பத்தாயிரம் ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com