“அக்காவின் கணவருடன் தனிமையில் இருந்த தங்கை” - வருங்கால கணவரை கொலை செய்ய தீட்டிய திட்டம்.. பேலா வனப்பகுதியில் கிடந்த சடலம்!

நீரஜை, முன்கூட்டியே பதுங்கியிருந்த சுபாஷ் பஸ்வானுடன் சேர்ந்து ஊர்மிளா சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளனர்...
urmila and niraj
urmila and niraj
Published on
Updated on
1 min read

ஜார்கண்ட் மாநிலம், கிரிதிஹ் மாவட்டம் ஜமுவா சோக் பகுதியைச் சேர்ந்தவர் 20 வயதான நீரஜ். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஊர்மிளா என்ற இளம்பெண்ணுக்கும் குடும்பத்தினரின் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், வருங்கால மனைவியே தனது காதலனுடன் சேர்ந்து நீரஜை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

போலீசார் நடத்திய விசாரணையில், ஊர்மிளாவுக்கும் அவரது அக்காவின் கணவரான சுபாஷ் பஸ்வானுக்கும் நீண்ட நாட்களாக கள்ளத்தொடர்பு இருந்ததும் இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்து வந்தது தெரியவந்தது. திருமணம் நடைபெற்றால் அந்த உறவைத் தொடர முடியாது என்று எண்ணிய இருவரும், நீரஜை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது. இதன்படி, ஊர்மிளா தனது வருங்கால கணவரான நீரஜை பீகார் மாநில எல்லையோரம் உள்ள பேலா வனப்பகுதிக்கு தனியாக வருமாறு அன்பாக அழைத்துள்ளார். அவரை நம்பி அங்கு சென்ற நீரஜை, முன்கூட்டியே பதுங்கியிருந்த சுபாஷ் பஸ்வானுடன் சேர்ந்து ஊர்மிளா சரமாரியாக கத்தியால் குத்தி தாக்கியுள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த நீரஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தர். இதற்கிடையே, வெளியில் சென்ற மகன் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பாததால் பதற்றமடைந்த அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தொழில்நுட்ப ஆதாரங்கள், செல்போன் அழைப்பு விவரங்கள் மற்றும் இருப்பிடத் தகவல்களை ஆய்வு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது, நீரஜின் கடைசியாக பேலா வனப்பகுதியில் இருந்தது தெரியவந்ததுடன், அதே இடத்தில் ஊர்மிளாவின் செல்போன் சிக்னல் பதிவாகியிருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து ஊர்மிளாவை காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரித்தபோது, முதலில் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்த அவர், பின்னர் சுபாஷ் பஸ்வானுடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, ஊர்மிளா மற்றும் சுபாஷ் பஸ்வான் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் இருவரும் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டனர். திருமணத்திற்கு முன்பே கள்ளத்தொடர்பை தொடரும் நோக்கில் வருங்கால கணவரை திட்டமிட்டு கொலை செய்த சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com