
கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியை சேர்ந்தவர் யுனஸ் பாஷா. இவரும் ஆஜிரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணும் கல்லூரி படிக்கும் போது காதலித்து வந்துள்ளனர். இதனை அறிந்த பாஷாவின் பெற்றோர்கள் இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இருவரும் நன்றாக வாழ்ந்து வந்த நிலையில் பாஷாவின் பெற்றோர்கள் ஆஜிராவை வரதட்சணை கேட்டு கொடுமை செய்துள்ளனர். இதனை பாஷாவும் ஆதரித்து வந்ததாக சொல்லப்படுகிறது. ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்த பாஷாவுக்கு வேலைக்கு செல்வது என்றாலே பிடிக்காது, ஆனால் பணத்தின் மீது மட்டும் ஆசை அதிகமாக இருந்துள்ளது.
அந்த பகுதியில் இருந்த அரசியல் வாதிகள் மட்டும் ரவுடிகளுடன் தொடர்பில் இருந்த பாஷா தனது மனைவியை அவர்களிடம் விலை பேசியுள்ளார், அதாவது “அரை மணி நேரத்திற்கு இவ்வளவு ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவு” என பேரம் பேசியுள்ளார். இதற்கு அடுத்தடுத்து அரசியல் வாதிகளும் ரவுடிகளும் சண்டை போட்டு கொண்டு முன்பதிவு செய்துள்ளனர். அதில் ஒரு ரவுடி உடனடியாக பாஷாவின் வங்கி கணக்கிற்கு லட்சக் கணக்கில் பணம் செலுத்தியுள்ளார்.
அந்த பணத்தை வைத்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளார் பாஷா. இதற்கிடையே ஆஜிரா கர்பமடைந்துள்ளார் இதனை அறிந்த பாஷா கட்டுப்படுத்தி ஆஜிராவின் கருவை கலைத்துள்ளார். மேலும் தனது டீலை பற்றி மனைவியிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆஜிரா கணவனை சரமாரியாக திட்டி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால் பாஷா தனது மனைவியை கத்தியை காட்டி மிரட்டி தான் சொல்வதை செய்ய வேண்டும் என வற்புறுத்தியுள்ளார்.
தனது கணவனிடம் இருந்து தப்பித்த ஆஜிரா பெங்களூரு காவல் ஆணையாளர் அலுவலகத்துக்கு சென்று தனது கணவர் மீது மாமியார் மற்றும் மாமனார் மீது புகாரளித்துள்ளார். வழக்கு பதிவு செய்த போலீசார் யுனஸ் பாஷா மற்றும் அவரது பெற்றோர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவன் மனைவியை அரசியல் வாதிகளுக்கு பேரம் பேசியது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.