
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள தேவபாண்டலம் கிராமத்தில் தியாகராஜபுரம் செல்லும் சாலையில் ஸ்ரீ ஓலைய் முனியப்பன் கோவில் உள்ளது. ஊர் பொதுமக்கள் சார்பில் நேற்று முனியப்பனுக்கு முப்பூசை செய்து பொங்கல் வைத்தும், முனியப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து முப்பூசை விழா நடைபெற்றது. பொங்கல் வைத்து முடித்த ஊர் மக்கள், அன்னதானம் சமைத்துக்கொண்டறிந்துள்ளனர்.
அப்போது அப்பகுதிக்கு வந்த அதே கிராமத்தைச் சேர்ந்த பிரபல நீண்ட நாள் கள்ளச் சாராய வியாபாரியான அண்ணாமலை என்பவரின் மகன் சதீஷ் என்பவர் இந்த முனியப்பன் கோவில் தனக்கே சொந்தம் எனவும் “என்ன கேட்காம எனக்கு சொந்தமான கோவிலுக்கு நீக்கலாம் எப்படி வரலாம், அப்புறம் யாரை கேட்டு இங்கு பொங்கல் வச்சீங்க, என்ன கேட்காம என் கோவிலுக்கு வந்து பொங்கல் வச்சதுக்கு வாடகை பணம் குடுங்க” என்று பிரச்சனை செய்துள்ளார்.
ஊர் பொதுமக்கள் தர மறுத்ததால் அவர்களை சதீஷ் மற்றும் அவரது உறவினர்கள் உருட்டு கட்டை மற்றும் அருகில் இருந்த இரும்பு பழுப்பு உள்ளிட்ட கொடிய ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். மேலும் தகாத வார்த்தைகளை பேசி கோவிலுக்கு வந்த மற்றவர்களிடமும் பிரச்சனை செய்துள்ளார். அது மட்டும் அல்லாமல் சதீஷ் மற்றும் அவரது உறவினர்கள் தாக்கியதில் இரண்டு நபர்கள் தீவிர சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் சதீஷ் என்பவர் கோயிலுக்கு வந்த பொதுமக்களை தாக்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து சங்கராபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் பிரபல கள்ளச்சாராய வியாபாரி கோயிலுக்குள் அத்துமீறி நுழைந்து பொதுமக்களை பணம் கேட்டு மிரட்டி தர மறுத்த பொதுமக்களை உருட்டு கட்டை மற்றும் இரும்பு பழுப்பு உள்ளிட்ட பொருட்களால் தாக்கும் வீடியோ வெளியாகி சங்கராபுரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.
மேலும் நீண்ட நாள் பிரபல கள்ளச்சார வியாபாரியான அண்ணாமலையின் மகன் சதிஷ் என்பவர் அதே கிராமத்தில் தற்போது கஞ்சா சட்டத்திற்கு புறம்பாக மது பாட்டில் கள்ளச்சாராயம் போன்றவற்றை விற்றதாக இவர் மீது சங்கராபுரம் காவல் நிலையத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.