“மாடு மேய்க்க வைத்து கொடுமை செய்த காதலன்” - திருமணமான 9 மாதத்தில் இளம்பெண் மரணம்.. கொலையா? தற்கொலையா?

இதனால் மனமுடைந்த ரோகிணி தனது பெற்றோர்கள் வீட்டிற்கு சென்று மாமியார் வீட்டில் தன்னை வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாக கூறியுள்ளார்
rogini and lokesh
rogini and lokesh Admin
Published on
Updated on
2 min read

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே உள்ள தெள்ளூர் அடுத்த ராந்தம் பகுதியைச் சேர்ந்தவர்கள் பாஸ்கரன் சாந்தி தம்பதியினர் இவர்களுக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ள நிலையில் இளைய மகள் ரோகிணி படித்து முடித்துவிட்டு ஆரணியில் உள்ள மெடிக்கல் கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். தனது வீட்டில் இருந்து ராணிக்கு பேருந்து மூலம் செல்லும் ரோகிணிக்கு அதே பகுதியை சேர்ந்த 22 வயதான லோகேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி ஒருவருக்கொருவர் காதலித்து வந்துள்ளனர். 

இந்நிலையில் ரோகிணியின் அக்கா மீனாட்சி தான் தங்களது திருமணத்திற்கு தடையாக இருப்பார்கள் என எண்ணிய லோகேஷ் மீனாட்சிக்கு போன் செய்து மிரட்டியதாக சொல்லப்படுகிறது. இதனால் ரோகிணியின் காதலை குறித்து அறிந்த பெற்றோர்களை லோகேஷுடனான காதலை கைவிடுமாறு கூறியுள்ளனர். இதனால் ரோகிணியும் லோகேஷுடன் பேசுவதை நிறுத்தியுள்ளார் இதனால் விரக்தியடைந்த லோகேஷ் விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சித்ததாக கூறப்படுகிறது எனவே ரோகிணி தனது வீட்டை எதிர்த்து கொண்டு கடந்த 9 மாதங்களுக்கு முன்பு லோகேஷை திருமணம் செய்து கொண்டார்.

Admin

திருமணத்திற்கு பிறகு ரோகிணியை லோகேஷின் பெற்றோர்கள் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்துள்ளனர். மேலும் லோகேஷும் வேலைக்கு போக வேண்டாம் என சொல்லி ரோகிணியை மாடு மேய்க்க வைத்து கொடுமைப்படுத்தியதாக சொல்லப்படுகிறது. இதனால் மனமுடைந்த ரோகிணி தனது பெற்றோர்கள் வீட்டிற்கு சென்று மாமியார் வீட்டில் தன்னை வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாக கூறியுள்ளார். அதற்கு ரோகிணியின் பெற்றோர் “உனக்கு குழந்தை பிறக்கும் போது சீர் செய்கிறோம்” என கூறி லோகேஷ் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

இந்த பிரச்சனை நடந்து வீட்டிற்கு சென்ற ரோகிணியை லோகேஷ் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் மேலும் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்ததாக சொல்லப்படும் நிலையில் நேற்று இரவு ரோகிணி லோகேஷ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகள் தற்கொலை செய்து கொண்டு இறந்ததை அறிந்த ரோகிணியின் பெற்றோர்கள் தனது மகளின் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருமணமான 9 மாதத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com