காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்துள்ள ராவத்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பலராமன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 35 வயதுடைய லதா என்பவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் நான்கு பெண் குழந்தைகள் உள்ளனர். பலராமன் சுப நிகழ்ச்சிகள் மற்றும் கோவில் திருவிழாக்களுக்கு பந்தல் அமைக்கும் பணி மற்றும் மைக் செட், அலங்கார விளக்குகள் அமைக்கும் பணிகள் செய்து வருகிறார். எனவே பலராமன் இரவு பகல் பாராமல் உழைத்து குடும்பத்தை காப்பாற்றி வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் பலராமனின் மனைவி லதாவுக்கு அதே ஊரைச் சேர்ந்த முனுசாமி என்பவரின் மகன் 27 வயதுடைய வசந்த் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. வசந்த் லதாவை விட எட்டு வயது சிறியவர் என்பதால் ஊர் மக்கள் யாரும் அதை தவறாக எடுத்துக் கொள்ளவில்லை. வசந்துக்கும் திருமணம் ஆகி அம்மு என்ற மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ள நிலையில் இருவரும் நெருங்கி பாக்கி வந்திருக்கின்றார். நாளடைவில் இவர்களது பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி இருவரும் அடிக்கடி வெளியில் சுற்றி வந்திருக்கின்றனர்.
மேலும் லதா தனது மகள்கள் மற்றும் கணவன் இல்லாத போது கள்ளக்காதலனுடன் வீட்டில் உல்லாசமாக இருந்து வந்திருக்கிறார். இந்த நிலையில் இந்த கள்ளக்காதல் விவகாரம் ஊர் மக்களுக்கும், லதாவின் கணவருக்கும், வசந்தின் மனைவி அம்முவுக்கும் தெரிய வந்தது. இதனால் இருவரையும் அழைத்து ஊர் மக்கள் மற்றும் உறவினர்கள் கண்டித்துள்ளனர். ஆனாலும் இருவரும் கள்ளக்காதலை கைவிடாததால் லதாவின் கணவர் பலராமன் மனைவியை பிரிந்து அவரது மகள்களோடு தனியாக வசித்து வருகிறார். ஒரு கட்டத்தில் கள்ளக்காதலர்கள் இருவரும் யாருக்கும் தெரியாமல் வெளியூர்களுக்கு சென்று உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.
அதேபோல கடந்த ஐந்தாம் தேதி வெள்ளிக்கிழமை கள்ளக்காதலர்கள் இருவரும் சென்னை கொளத்தூர் பகுதிக்குச் சென்று உல்லாசமாக இருந்துள்ளனர், அப்போது லதா வசந்திடம் “உன்னால் தான் நான் என் குழந்தைகளையும், கணவனையும் விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறேன், ஆனால் நீ மட்டும் உன் மனைவி குழந்தைகளோடு சந்தோஷமாக இருக்கிறாய், அதனால் நீ உன் மனைவி பிள்ளைகளை விட்டு என்னோடு வந்துவிடு நாம் எங்காவது சென்று வாழலாம், இல்லையென்றால் என்னை விட்டு விடு நான் இனி உன்னோடு உல்லாசம் அனுபவிக்க வரமாட்டேன்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது.
ஏற்கனவே பலமுறை இதேபோன்று லதா வசந்திட்டம் சண்டை போட்டு வந்த நிலையில் இதனால் ஆத்திரமடைந்த வசந்த் லதாவை தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளார். அதற்காக சம்பவத்தன்று தயாராக கத்தி ஒன்றை எடுத்துச் சென்றுள்ளார். வழக்கம்போல இருவரும் உல்லாசம் அனுபவித்த பிறகு இருவருக்கும் இடையே வழக்கமான சண்டையும் வாக்குவாதமும் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்று வசந்த் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் லதாவின் கழுத்து, முதுகு, கை போன்ற பல்வேறு பகுதிகளில் சரமாரியாக வெட்டியுள்ளார்.
லதாவின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடிச் சென்று பார்த்துள்ளனர் அதற்குள் வசந்த் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தால் லதாவை மீட்டு கொளத்தூர் பெரியார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தடயங்களை சேகரித்ததுடன் லதா குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவரை வெட்டிவிட்டு தப்பி சென்றவர் வசந்த் என்பது தெரிய வந்தது.
உடனே இந்த சம்பவம் குறித்து போலீஸ் தனிப்படை அமைத்து தலைமறைவான வசந்தை உத்திரமேரூர் பகுதியில் தேடி வந்தனர். இந்த நிலையில் வசந்தை போலீசார் அவரது செல்போன் சிக்னலை வைத்து சென்னை மாதவரத்தில் கைது செய்ததாக கூறப்படுகிறது. மேலும் காவல்துறையினர் வசந்திடம் நடத்திய விசாரணையில் மேல் கூறப்பட்ட தகவல்கள் அனைத்தும் தெரிய வந்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த நிலையில் வசந்தை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். கள்ளக்காதலன் கள்ளக்காதலியை வெட்டிய சம்பவம் உத்திரமேரூர் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.