

கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் அடுத்து உள்ள கோவில் புரம் பகுதியை சேர்ந்தவர் 44 வயதுடைய கண்ணன். இவர் டெம்போ டிரைவராக பணியாற்றி வந்த நிலையில் நேற்று முன்தினம் கார்த்திகை வடலி பகுதியில் ஆற்றோரம் உள்ள தென்னந்தோப்பில் நிர்வாணமான நிலையில் வெட்டு காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது உடலை பார்த்த அப்பகுதி மக்கள் இந்த சம்பவம் குறித்து இராஜாக்கங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நான்கு தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்ததில், சந்தேகத்தின் பேரில் கோணம் பகுதியை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் மற்றும் இரண்டு வாலிபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர் அதில் கொலைக்கான பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அன்று இரவு தென்னை தோப்பில் மது அருந்திக் கொண்டிருந்த கண்ணன் உடன் அதே பகுதியை சேர்ந்த ஜான்சிலி மற்றும் இரண்டு சிறுவர்கள் ஒன்றாக சேர்ந்து மது அருந்தியுள்ளனர்.
பின்னர் அல்லாஹ்வுக்கு அதிக போதையில் இருந்த ஜான்சிலி கண்ணனை ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக சொல்லப்படுகிறது எனவே இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில் ஆத்திரமடைந்த ஜான்சிலி அருகில் இருந்த அரிவாளால் கண்ணனை சரமாரியாக வெட்டி கொலை செய்திருக்கிறார். இதற்கு இரண்டு சிறுவர்களும் உடந்தையாக இருந்த நிலையில் மூவரும் அப்பகுதியை விட்டு தப்பி சென்றது விசாரணையில் தெரியவந்ததது.
இதனை தொடர்ந்து சிறுவர்கள் உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் ஜான்சிலியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இரண்டு சிறுவர்கள் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பிவைத்துள்ளனர். ஓரின சேர்க்கையில் ஈடுபட மறுத்த கண்ணனை மதுபோதையில் ஜான்சிலி கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட நால்வரில் ஒருவருக்கு கொலையில் சம்பந்தம் இல்லாத நிலையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.