
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியை சேர்ந்தவர் மகேஷ். இவருக்கு 40 வயது ஆகும் நிலையில் பட்டதாரியான இவர் அதே பகுதியில் “ஹோலி ஏஞ்சல்” என்ற பெயரில் டியூஷன் சென்டர் நடத்தி வருகிறார். அந்த டியூஷன் சென்டரில் 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்துள்ளனர்.
குறிப்பிட்ட வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு குறிப்பிட்ட அறைகள் என தனி தனியாக டியூஷன் சென்டரில் மொத்தம் ஐந்து அறைகள் உள்ளது. இந்த டியூஷன் சென்டரில் குளச்சல் பகுதியை சேர்ந்த தம்பதிகள் கடந்த சில மாதங்களுக்கு முன் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகனையும், ஏழாம் வகுப்பு படிக்கும் மகளையும் சேர்த்து விட்டு உள்ளனர்.
தொடர்ந்து பள்ளியை முடித்துவிட்டு அண்ணனும் தங்கையும் மாலையில் டியூஷன் சென்று வந்துள்ளனர். வழக்கம் போல் கடந்த (ஜூன் 10) தேதியும் இருவரும் டியூசன் சென்டருக்கு சென்றுள்ளனர். அண்ணனும் தங்கையும் வேறு வேறு வகுப்பில் இருந்து படித்து வந்துள்ளனர். அப்போது ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுமியின் வகுப்பில் சிறுமி உட்பட ஐந்து மாணவர்கள் பயின்றுவந்துள்ளனர்.
சரியாக இரவு 7 மணிக்கு சிறுமி பயிலும் வகுப்பிற்கு சென்ற ஆசிரியர் மகேஷ். சிறிது நேரம் பாடம் கற்பித்து விட்டு சிறுமியை தவிர மற்ற மாணவர்களை “பாத்ரூம் போயிட்டு வாங்க” என அனுப்பிவித்துள்ளார். பின்னர் வகுப்பறையில் தனிமையில் இருந்த சிறுமியிடம் மகேஷ் தவறாக நடந்து கொள்ள முயற்சித்துள்ளார். எனவே சிறுமி பயந்து சத்தம் போட்டுள்ளார்.
சிறுமியின் அலறல் சத்தம் கேட்ட அவரது அண்ணன் பக்கத்துக்கு அறையில் இருந்து சிறுமியின் அறைக்கு வந்துள்ளார். அங்கு தனது தங்கையை ஆசிரியர் ஏதோ செய்கிறார் என்பதை உணர்ந்து, மகேஷை கீழே தள்ளிவிட்டு தனது தங்கையை அழைத்து கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் வீட்டில் இருந்த பெற்றோர்களிடம் தங்கைக்கு நடந்ததை விவரித்துள்ளார். இதை கேட்டு கோபமடைந்த பெற்றோர்கள் மாணவர்கள் இருவரையும் அழைத்து கொண்டு குளச்சல் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர். அங்கு இருந்த காவலர்களிடம் சிறுமிக்கு நடந்ததை கூறி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின் அடிப்படையில் டியூஷன் சென்டர் ஆசிரியரான மகேஷை கைது செய்த போலீசார். அவர் மீது போக்சோ உட்பட 5 பிரிவுகளின் படி வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். படிக்கச் சென்ற இடத்தில் சிறுமிக்கு நடந்த பாலியல் சீண்டல் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.