“16 வயது சிறுமியை பலமுறை சீரழித்த வாலிபர்” - வயிறு வலி என போன மாணவி கர்ப்பம்.. மருத்துவமனையில் வெளிவந்த உண்மை!

ஒரு கட்டத்தில் மாணவி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த அவர், அங்கு சென்று மாணவியை மாடிக்கு அழைத்துச் சென்று...
Kanyakumari POCSO Case
Kanyakumari POCSO Case
Published on: 
Updated on: 
1 min read

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே, 16 வயது பள்ளி மாணவியைக் கர்ப்பமாக்கியதாக 22 வயது பொறியியல் கல்லூரி மாணவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். வயிற்று வலி காரணமாக மாணவி மருத்துவமனைக்குச் சென்றபோது அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி, அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவிக்குத் திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் வலியால் துடித்த மாணவி, தனது தாயிடம் கூறி அழுதுள்ளார்.

இதையடுத்து, மாணவியை அவரது தாயார் கேரள மாநிலம் நெய்யாற்றங்கரையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மாணவியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் கர்ப்பமாக இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தாயார், மகளிடம் விசாரித்துள்ளார். அப்போது, கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய பிஜோ தியோ என்ற வாலிபர் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக மாணவி தெரிவித்துள்ளார். பிஜோ தியோ, கோவையில் உள்ள கல்லூரி ஒன்றில் பொறியியல் படித்து வருகிறார்.

பிஜோ தியோவிற்கும் மாணவிக்கும் கோவில் திருவிழா ஒன்றின்போது பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது மாணவியிடம் செல்போன் எண்ணைப் பெற்றுக்கொண்ட பிஜோ தியோ, தொடர்ந்து அவருடன் பேசி வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த பிஜோ தியோ, மாணவியை நேரில் சந்திக்க விரும்புவதாகக் கூறியுள்ளார். ஒரு கட்டத்தில் மாணவி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த அவர், அங்கு சென்று மாணவியை மாடிக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறிப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

பின்னர் இதே போல அவர் தொடர்ந்து மாணவியிடம் அத்துமீறியதாகத் தெரிகிறது. இதன் காரணமாகவே மாணவி கர்ப்பமானது மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, மாணவியின் தாயார் குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், பிஜோ தியோவைக் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்