சமூக வலைத்தளத்தில் தன்னிடம் உள்ள பணம் மற்றும் நகைகளை மையமாக வைத்து வீடியோ போட்டு பிரபலமானவர் கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த மதுமிதா. இவருக்கு வினோத் குமார் என்பவருடன் திருமணமாகி 8 வயதில் ஒரு மகள் உள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தம்மத்துகோணம் பகுதியில் உள்ள விஐபி கார்டனில் இவர்கள் தனியாக வீடு வாங்கி வசித்து வருகின்றனர். அதிக பணம் மற்றும் நகை வைத்துள்ள இந்த தம்பதி பணத்தை மெத்தையில் விரித்து வீடியோ வெளியிடுவது, நகை வாங்குவது, வங்கியின் இருப்பு குறித்து வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்தனர்.
இந்நிலையில் கடந்த மாதம் மதுமிதா அவரது குடும்பத்துடன் வெளியூருக்கு சென்றிருந்த போது (செப் 24)ஆம் தேதி அவரது வீட்டில் 118 சவரன் மற்றும் ரொக்க பணம் ஆகியவைகள் திருடு போயிருந்தது. இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையில் நெட்டிசன்கள் பலரும் “மதுமிதாவுக்கு இது தேவை தான் பணத்தை வைத்து ஆட்டம் போடாக்கூடாது” என கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இதனை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார் கடந்த (செப் 29) ஆம் தேதி மூன்று கொள்ளையர்களை கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த இசக்கி பாண்டி (30) மற்றும் அவருக்கு உடந்தையாகச் செயல்பட்ட அவரது நண்பர்களான முருகன், முருகேசன் ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் மதுமிதாவின் இன்ஸ்டாகிராம் வீடியோவைப் பார்த்து தான் கொள்ளையடிக்க வந்ததாக இசக்கி பாண்டி வாக்குமூலம் அளித்திருந்தார். மொத்தம் அவர்களிடமிருந்து 98 சவரன் தங்க நகை மற்றும் சில வைர நகைகள் மீட்கப்பட்டன.
இந்த கொள்ளை சம்பவத்திற்கு பிறகு மதுமிதா மேலும் மக்களிடையே பிரபலமானர். இதனை தொடர்ந்து பலரும் அவர்களுக்கு இவ்வளவு பணம் எப்படி வந்தது? என்பது குறித்து வருமான வரித்துறை விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் மதுமிதா மீது உள்ள பல்வேறு வழக்குகள் வெளியில் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூரை தனது சொந்த ஊர் என சொல்லிக்கொள்ளும் மதுமிதா கடந்த 2022 ஆம் ஆண்டு நெல்லையில் உள்ள ஸ்பாவில் பணியாற்றியிருக்கிறார்.
அப்போது நெல்லை கே.டி.சி. நகரைச் சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரர் 38 வயதுடைய பேச்சிமுத்துவை தனது ஸ்பாவிற்கு அழைத்த மதுமிதா அவருடன் நன்றாக பேசி பழகி வந்துள்ளார். அப்போது ஒரு நாள் அவரது காரில் பயணம் செய்த மதுமிதா அவரது 5 சவரன் தங்க நகையை திருடியதாக சொல்லப்படுகிறது. இது குறித்து அவர் மதுமிதாவிடம் கேட்ட போது “நீ என்கூட தப்பா இருந்தேன் வெளில சொல்லிடுவேன்” என கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த பேச்சிமுத்து நீண்ட நாட்களுக்கு பிறகு அவர் மீது புகார் அளித்துள்ளார். அதன் படி அந்த நெல்லை நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
மேலும் இவர் பொய்யாக பிசியோதைரபிஸ்ட் என கூறி கொண்டு பல ஸ்பாக்களில் பணியாற்றியதாகவும் இவர் மீது வழக்கு உள்ளதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் கூட கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மதுமிதா கன்னியாகுமாரி வடசேரி பகுதியில் சட்டவிரோதமாக ஸ்பா நடத்தியதாக அவர் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் கைதாகி காப்பக காவலில் இருந்த மதுமிதா கடிதம் எழுதி கொடுத்து வெளியில் வந்ததாகவும் கூறப்படுகிறது.
நகை பணம் வைத்து வீடியோ வெளியிட்ட மதுமிதா வீட்டில் நகைகள் திருடு போனதை தொடர்ந்து அவர் மீது உள்ள புகார்கள் ஒவ்வொன்றாக வெளியே வரும் சம்பவம் சமூகவலைத்தளத்தில் பேசுபொருளாகியுள்ளது. மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வருமான வரித்துறை விசாரணையும் நடைபெற்று வருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்