சென்னை செயிண்ட் தாமஸ் மவுண்ட் பகுதியைச் சேர்ந்தவர் 30 வயதுடைய அருண் பாண்டியன். பெயிண்டராக வேலை செய்து வந்த இவர், திருமுடிவாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரதிபா என்ற பெண்ணை சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இருவரும் தனியாக வீடு எடுத்து வசித்து வந்த நில்லியில் அருண் பாண்டியன் மதுபோதைக்கு அடிமைக்கியுள்ளார். எனவே தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் விரக்தியடைந்த பிரதிபா அருணை பிரிந்து வாழ முடிவு செய்து கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கணவரை பிரிந்து, திருமுடிவாக்கம் அருகே வழுதலம்பேட்டில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இதற்கிடையில் அருண் பலமுறை பிரதிபாவிடம் செல்போனில் பேசு முயற்சித்தும், நேரடியாக சென்று சமாதானம் பேசியுள்ளார். ஆனால் பிரதிபா அவரிடம் பேசுவதை தவிர்த்து வந்திருக்கிறார்.
இந்த நிலையில், மீண்டும் வழக்கம்போல நேற்று(அக் 04) தனது மனைவியை அழைத்துச் செல்வதற்காக அருண் பாண்டியன், பிரதிபாவின் பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பிரதிபாவின் தம்பி பிரவீன் மற்றும் அவரது நண்பர்கள் வெங்கடேசன், வேலு ஆகிய 3 பேரும் சேர்ந்து அருண் பாண்டியனை பிரதிபா கண்முன்னே சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.
இதில் படுகாயமடைந்த அருண் பாண்டியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருமுடிவாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கொலை செய்யப்பட்ட அருண் பாண்டியனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை தொடர்பாக பிரதிபாவின் தம்பி பிரவீன் மற்றும் அவரது நண்பர்கள் வெங்கடேசன், வேலு ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒன்றரை ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்த மனைவியை மீண்டும் அழைத்துச் செல்ல வந்த கணவனை, வாக்குவாதம் முற்றியதால் அவரது மைத்துனரே நண்பர்களுடன் சேர்ந்து வெட்டிக் கொலை செய்த சம்பவம் திருமுடிவாக்கம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்