

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அரியக்குடி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி இவருக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் என மூன்று பிள்ளைகள் உள்ள நிலையில் இரண்டு மகள்களுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில் மகன் பழனியப்பனுக்கு 36 வயதாகியும் திருமணமாகாத நிலையில் அவர் கட்டிடப் பொறியாளராக பணியாற்றி வந்தார். மேலும் பாரதிய ஜனதா கட்சியில் இளைஞர் அணி மாவட்ட செயலாளராகவும் இருந்து வந்தார்.
எனவே தங்களது ஊரில் ஊரில் ஏற்படும் மக்கள் சார்ந்த பொதுவான பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பார் எனவும் மேலும் தகவல் உரிமைச் சட்டத்தின் மூலம் ஊராட்சிகளில் நடைபெறும் பல்வேறு முறைகேடுகளை சுட்டிகாட்டியவர் என்றும் சொல்லப்படுகிறது. பழனியப்பன் அரியக்குடி, இலுப்பகுடி பகுதிகளில் தனக்கு சொந்தமான நிலத்தில் கடைகளை கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். இதனால் அப்பகுதியில் உள்ள சிலருடன் பழனியப்பனுக்கு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் நேற்று மாலை பொன்நகரில் அவர் புதிதாக கட்டி வரும் வீட்டை மேற்பார்வையிட்டுவதற்காக சென்றிருந்த நிலையில் அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றது. இதில் படுகாயமடைந்த பழனியப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அழகப்பாபுரம் காவல் துறையினர் பழநோயப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் முதற்கட்ட விசாரணையில், முன்விரோதத்தில் கொலை நடந்துள்ளது தெரியவந்ததுள்ளது. எனவே ASP ஆஷிஷ் புனியா தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைத்து கொலை செய்து தப்பிய குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
பழனியப்பனின் சகோதரிகள் மற்றும் ஊர்மக்கள் சிலர் உண்மையான குற்றவாளிகள் விரைந்து கைது செய்ய வேண்டும் எனவும் ஏற்கனவே இவருக்கு கொலை மிரட்டல் விடுத்த நிலையில் அதை காவல் துறை தடுக்க தவறியதே இதற்கு காரணம் என தெரிவித்தனர். மேலும் குற்றத்தை தடுக்க தவறிய காவல்துறை கண்டித்து நாளை காலை அரசு மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்த இருப்பதாக மாவட்ட பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.