
கர்நாடக மாநிலம் மூடபத்திரி பகுதியில் இயங்கி வரும் தனியார் கல்லூரி மூன்றாம் ஆண்டு படித்து வரும் மாணவி மாரத்தஹள்ளி பகுதியை சேர்ந்த ஸ்ரீநிஷா. (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் படித்து வரும் கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் 32 வயதான நரேந்திரா. வகுப்பறையில் படம் குறித்து சந்தேகம் கேட்ட மாணவியிடம் நோட்ஸ் அனுப்புவதாக நம்பர் வாங்கிய நரேந்திரா மனைவியிடம் தினமும் போனில் பேசி வந்துள்ளார். மேலும் மாணவிக்கு மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்தியுள்ளார்.
எனவே நரேந்திராவுடன் நட்பாக பழக தொடங்கியுள்ளார் மாணவி ஸ்ரீநிஷா, இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட நரேந்திரா கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவியை தனியாக வெளியில் அழைத்து சென்றுள்ளார். சில இடங்களுக்கு மாணவியை அழைத்து சென்ற நரேந்திரா, பக்கத்தில் இருந்த தனது நண்பரான அனுப் வீட்டிற்கு மாணவியை அழைத்து சென்றுள்ளார். அங்கு அனுப் மற்றும் நரேந்திர தனியாக பேசிக்கொண்ட நிலையில் மாணவியை ஒரு அறையில் போட்டு பூட்டி வைத்துள்ளனர்.
பின்னர் அறைக்குள் சென்ற நரேந்திரா மாணவியிடம் அத்துமீறி நடந்து கொண்டுள்ளார். இதனை அறைக்குள் வெளியில் இருந்த அனுப் வீடியோ எடுத்த நிலையில் மாணவியிடம் “இதை பற்றி வெளியில் சொன்னால் வீடியோவை சோசியல் மீடியாவில் போட்டு விடுவோம்” என மிரட்டியுள்ளனர். இதனால் தனக்கு நடந்த அநியாயத்தை வெளியில் கூறாத ஸ்ரீநிஷா நரேந்திரா சொல்வது போல கேட்டு வந்துள்ளார். அந்த வீடியோவை வைத்து மிரட்டி மாணவியை தனது வீட்டிற்கு வரவழைத்து அனுப் மாணவியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி உள்ளார்.
அது மட்டுமல்லாமல் மாணவியின் கல்லூரியில் பணிபுரியும் நரேந்திராவின் நண்பரான உயிரியல் பேராசிரியர் சந்தீப் என்பவரும் இதை பற்றி தெரிந்து கொண்டு நரேந்திராவிடம் “யார் அந்த பொண்ணு சொல்லுங்க நானும் யூஸ் பண்ணிக்கிறேன்” என கேட்டுள்ளார். அதற்கு மாணவியின் வீடியோவை அனுப்பிய நரேந்திரா மாணவியை மிரட்டி சந்தீப் உடனும் தனிமையில் இருக்க சொல்லி வற்புறுத்தியுள்ளார். இதனால் மேலும் பயந்த மாணவி அவர்கள் செய்யும் கொடுமைகளை தாங்கிக் கொள்ள முடியாமல், தனக்கு நடந்த கொடுமைகளை பற்றி தனது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதை கேட்டு ஆத்திரம் அடைந்த ஸ்ரீநிஷாவின் பெற்றோர்கள் போலீசில் சென்று தனது மகளுக்கு நடந்த கொடுமைகளை பற்றி புகாரளித்துள்ளனர். புகாரை ஏற்று விரைந்து செயல்பட்ட காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு பேராசிரியர்கள் நரேந்திரா, சந்தீப் மற்றும் நரேந்திராவின் நண்பர் அனுப்பை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கல்லூரி படிக்கும் மாணவி பேராசிரியர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.