
வேலூர் அடுத்துள்ள காட்பாடியில் நேற்று முன்தினம் (மே 05), தலையில் கல்லைப்போட்டு கொல்லப்பட்ட ஒருவரின் உடல் ரயில்வே தண்டவாளத்திற்கு அருகில் இருப்பதாக, அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து. வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர்.
போலீஸ் விசாரணையில் கொல்லப்பட்டவர், காட்பாடி பகுதியில் உள்ள கொசுவலை தயாரிக்கும் ஷியாம் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும். ஒரிசா சுதர்சன்பூர் பகுதியை சேர்ந்த பால பத்திரா என்ற 33 வயதுடையவர் என்ற விவரங்கள் தெரியவந்தது.
விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் முதற்கட்டமாக 6 பேரிடம், பத்திரா கொலையை பற்றிய விசாரணை மேற்கொண்டனர். பிரமோத் குமார் என்றவர் பத்திராவை கொலை செய்ததை விசாரணையின்போது போலீசார் கண்டறிந்தனர்.
சம்பவம் நடந்த அன்று இரவு பத்திரா மற்றும் பிரமோத் மற்ற நண்பர்களுடன் இணைந்து மது அருந்தியுள்ளனர். அனைவரும் மது அருந்திவிட்டு பேசிக்கொண்டிருந்த போது பத்திராவும் பிரமோத்தும் மட்டும் தனியாக சென்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது பத்திராவுக்கும் பிரமோத்துக்கும் இடையே 500 ரூபாய் கொடுக்கல் வாங்கல் குறித்து பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இருவரும் மது போதையில் இருந்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. இதன் பேரில் ஆத்திரம் அடைந்த பிரமோத் பத்திராவை தாக்கி பத்திராவின் தையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்தது தெரியவந்தது.
வெளியூரில் இருந்து வேலைக்கு வந்த நபர் தலையில் கல்லை போட்டு கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்