கேரளாவை சேர்ந்த 56 வயது முதியவரொருவர் இதுவரை 22 பெண்களை திருமணம் செய்து கொண்டு அவர்களுடன் வாழ்ந்து வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படத்தில் கூட சாத்தியமில்லாத ஒரு சம்பவத்தை நேரில் ஒருவர் செய்துள்ளது தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது. திருவனந்தபுரம் ஆற்றிங்கள் பகுதியில் ஒரு முதியவர் நடந்து சென்று கொண்டிருந்த போது அவரிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் 7 சவரன் தங்க சங்கலியை திருடி தேடி சென்றிருக்கிறார்.
இதனால் அதிர்ச்சியடைந்த முதியவர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் இது குறித்து புகாரளித்த நிலையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய வட்டிக்காவூர் பகுதியை சேர்ந்த 56 வயதுடைய பகூலேயன் என்ற நபரை கைது செய்து அவரிடம் போலீசார் விசாரணை செய்த போது பல திடுக்கிடும் தகவல்களை வெளியாகியுள்ளன. இவர் தனது இருபதாவது வயதில் இருந்து இதுவரை கேரளாவில் உள்ள 22 மாவட்டங்களிலும் ஒரு பெண் என்ற விகிதத்தில் தற்போது வரை 22 பெண்களை திருமணம் செய்து அவரக்ளுடன் குடும்பம் நடத்தி வருகிறார்.
இதுவரை எந்த பெண்ணுக்கும் பகூலேயன் வேறு பெண்களை திருமணம் செய்து வாழ்ந்து வருவது தெரியாது என சொல்லப்படுகிறது. மேலும் இவர் ஒவ்வொரு பெண்ணையும் திருமணம் செய்யும் போது தான் ஒரு அரசு அதிகாரி என்றும் பெரிய தொழிலதிபர் என்றும் கூறி ஏமாற்றி வந்திருக்கிறார். இந்த பொய்யை காப்பாற்றவே நகை திருட்டில் ஈடுபட்டு அதில் திருடும் நகைகளை மனைவிகளுக்கு கொடுத்து திருப்தி படுத்தி வந்திருக்கிறார். மேலும் இவர் பெரும்பாலும் கணவனை பிரிந்து வாழும் பெண்களை குறி வைத்து திருமணம் செய்து கொண்டதும் தெரிய வந்துள்ளது.
ஏற்கனவே இவர் மீது பல்வேறு மாவட்டங்களில் வழிப்பறி மற்றும் திருட்டு வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தற்போது மேலும் இவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்த கேரளா போலீசார் ஆற்றிங்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் எடுத்திருக்கின்றனர். 56 வயதுடைய முதியவர் 22 மாவட்டங்களில் 22 பெண்களை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.