“அவசரமாக வீட்டுக்கு வரச் சொன்ன மனைவி” - கதவை உடைத்து பார்த்த கணவனுக்கு அதிர்ச்சி.. அடுத்த நொடி கள்ளக்காதலன் செய்த காரியம்!

தனது கணவருக்கும் சுஜாதாவுக்கும் இடையே தவறான தொடர்பு இருப்பதாகவும், சுஜாதாவை கண்டிக்குமாறும் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது...
Extra Marital Affair suicide
Extra Marital Affair suicide
Published on
Updated on
1 min read

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ரோஸ் காட்டேஜ் பகுதியைச் சேர்ந்தவர் வாசு என்பவற்றின் மகன் 48 வயதுடைய சிவகுமார். இவர் கோத்தகிரி டானிங்டன் பகுதியில் எலக்ட்ரிக்கல் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி 40 வயதுடைய சுஜாதா என்ற மனைவியும், ஒரு மகள் மற்றும் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில், சிவகுமாரின் நண்பரான காம்பாய்கடை பகுதியைச் சேர்ந்த அச்சு என்ற அச்சுதானந்தனுக்கும், சுஜாதாவுக்கும் இடையே திருமணத்தை மீறிய தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த அச்சுதானந்தனின் மனைவி பரிமளா, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சிவகுமாரை தொடர்புகொண்டு, தனது கணவருக்கும் சுஜாதாவுக்கும் இடையே தவறான தொடர்பு இருப்பதாகவும், சுஜாதாவை கண்டிக்குமாறும் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. மேலும், தான் தனது கணவரை கண்டிப்பதாகவும் பரிமளா கூறியதாக தெரிகிறது. இந்த நிலையில், சம்பவத்தன்று மதியம் சுஜாதா தனது கணவரான சிவகுமாரை செல்போனில் தொடர்புகொண்டு, அவசரமாக வீட்டிற்கு வருமாறு கூறியுள்ளார்.

இதையடுத்து கடையில் இருந்து உடனடியாக வீட்டிற்கு சென்ற சிவகுமார், கதவைத் தட்டியுள்ளார். ஆனால், கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அவர், வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது சுஜாதா தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சுஜாதாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனிடையே, சுஜாதா உயிரிழந்த தகவலை அறிந்த அச்சுதானந்தன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. அவரையும் மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சிவகுமார் அளித்த புகாரின் பேரில், கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுஜாதா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? திருமணத்தை மீறியதாக கூறப்படும் தொடர்பு காரணமாக ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, சுஜாதாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பரிசோதனை முடிந்த பின்னர் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மனைவி தூக்கிட்டு உயிரிழந்த நிலையில், அவரது கள்ளக் காதலன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கோத்தகிரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com