“70 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொலை” - அதிகாலையில் குடிசைக்குள் புகுந்த கொடூரம்.. பெங்களுருவில் சிக்கிய குற்றவாளி!

அவர் சத்தம் போடாமல் இருப்பதற்காக வாயை அழுத்திப் பிடித்ததில் மூதாட்டி உயிரிழந்ததாகவும் சூரியகுமார் வாக்குமூலம்...
70 Year Old Woman Murder
70 Year Old Woman Murder
Published on: 
Updated on: 
2 min read

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே தனியாக வசித்து வந்த 70 வயது மூதாட்டியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக 30 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூருவில் பதுங்கியிருந்த அவரைப் பிடித்து விசாரணை நடத்தியதில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள பண்ணந்தூர் பகுதியில் 70 வயதான சாமுண்டீஸ்வரி என்ற மூதாட்டி, தனியாகக் குடிசை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று(அக் 31) அதிகாலையில் அவர் தனது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார்.

இதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக பாரூர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மூதாட்டியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, அவரது மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய சூரியகுமார் என்பவர் சம்பவத்தன்று அதிகாலையில் மூதாட்டியின் குடிசை வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, தலைமறைவான சூரியகுமாரைப் பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, சூரியகுமார் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, பெங்களூரு விரைந்த தனிப்படை போலீசார், அங்கு பதுங்கியிருந்த சூரியகுமாரைப் பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து, அவரைப் பாரூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொணடத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

Pochampalli old lady murder arrest
Pochampalli old lady murder arrest

மூதாட்டியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அப்போது அவர் சத்தம் போடாமல் இருப்பதற்காக வாயை அழுத்திப் பிடித்ததில் மூதாட்டி உயிரிழந்ததாகவும் சூரியகுமார் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அச்சமடைந்து அங்கிருந்து தப்பித்து பெங்களூருவுக்குச் சென்றதாகவும் அவர் கூறியதாகத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து, சூரியகுமார் மீது வழக்குப் பதிவு செய்த பாரூர் போலீசார், அவரைப் போச்சம்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

பின்னர், நீதிமன்ற உத்தரவின்பேரில் அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் விரைவாக செயல்பட்டு குற்றவாளியை பிடித்த பாரூர் போலீசாருக்கு நீதிபதி மற்றும் சமூக ஆர்வலர்கள் வாழ்த்து தெரிவித்தனர். தனியாக வசித்து வந்த 70 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.