

ஆந்திர மாநிலம் அனந்தபுரியை சேர்ந்தவர் இளம் பெண் சரஸ்வதி இவர் பெங்களூரில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அங்கு இவருடன் பணிபுரியும் தோழி ஒருவரின் நண்பரான ராமநாதபுரத்தை சேர்ந்த கோபி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் நெருங்கி பலகை வந்த நிலையில் இவர்களது பழக்கமானது காதலாக மாறியுள்ளது. எனவே வேலூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் கோபி பெங்களூரு சென்று தனியாக வீடு எடுத்து இருவரும் லிவின் உறவில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்து சரஸ்வதியுடன் பல்வேறு இடங்களுக்கு ஊர் சுற்றி வந்திருக்கிறார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு சென்று வருவதாக சொல்லி தமிழ்நாட்டிற்கு வந்த கோபி சரஸ்வதி பலமுறை போன் செய்தும் எடுக்காமல் இருந்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் தொடர்பு கொள்ள முயற்சித்த போது கோபி அதனை தவிர்த்து வந்திருக்கிறார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சரஸ்வதி இதுகுறித்து ராமநாதபுரம் ஓம் சக்தி நகர் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார். புகாரளித்து நீண்ட நாட்களாகியும் போலீசார் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என சொல்லப்படுகிறது.
இதனால் கோபியை தேடி வேலூர் சென்ற இளம்பெண் சரஸ்வதின் ஆவர் பணிபுரியும் இடம் மற்றும் அவரது நண்பர்களிடம் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்காத நிலையில் “தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாக” வேலூர் காவல் நிலையத்திலும் புகார் கொடுத்திருக்கிறார். இந்நிலையில் நேற்று ராமநாதபுரம் ஓம் சக்தி நகர் 5வது தெருவில் உள்ள காதலன் கோபியின் வீட்டுக்கு சென்ற காதலி சரஸ்வதி கோபியின் பெற்றோரிடம் அவர் குறித்து கேட்டிருக்கிறார். அதற்கு பதிலளிக்காத அவரது பெற்றோர்கள் சரஸ்வதியை வீட்டுக்குள் விடாமல் வாசலில் நிற்க வைத்துவிட்டு வீட்டை பூட்டிக் கொண்டு அவசர அவசரமாக வெளியேறிவிட்டனர் என கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து இளம் பெண் சரஸ்வதி காதலன் கோபி வீட்டு வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார் தகவல் அறிந்து அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானோர் அந்த பகுதியில் கூடினார். எனவே அங்கு வந்த கேணிக்கரை போலீசார் இளம்பெண்ணுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவரை காவல் நிலையத்திற்கு அழைத்தனர். ஏற்கனவே புகார் அளித்த நிலையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி காவல் நிலையத்துக்கு அந்த பெண் வர மறுத்தார். எனவே போலீசார் அவரை விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து காவல் நிலையத்திற்கு வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றுள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்