தெற்கு லாஸ் ஏஞ்சல்ஸின் ஒரு சாலைப் பகுதியில், காமக் கொடூரர்கள் குழந்தைகளை விலைக்கு வாங்கும் வகையிலும் , பெண்கள் வெறும் 40 டாலருக்கு விபச்சாரம் செய்யும் வகையிலும் தங்கள் ஆதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்ள, லாஸ் ஏஞ்சல்ஸ் தரகர்கள் "பயங்கரமான" கொடுமைகளைப் பயன்படுத்தினர் என்று காவல்துறையினரும் அரசு வழக்கறிஞர்களும் கூறியுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸின் ஃபிகெரோவா காரிடார் பகுதியில், பாலியல் தரகர்கள் , பாலியல் தொழிலாளிகளுக்கு முத்திரை குத்துதல், காப்பகங்களிலிருந்து சிறுமிகளைச் சேர்த்தல், அவர்களைக் கருக்கலைப்பு செய்யக் கட்டாயப்படுத்துதல், மேலும் அவர்களைக் கடித்தும் குத்தியும் செழிப்பான பாலியல் தொழிலை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் மக்களால் “தி பிளேட்” என்று அழைக்கப்படும் ஃபிகெரோவா பகுதியில் செயல்பட்டு வந்த குறைந்தது பத்து விபச்சாரத் தலைவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களின் பாலியல் வர்த்தக ரகசியங்கள் அம்பலமாகியுள்ளன. "இப்படித்தான் அவர்கள் ஃபிகெரோவாவில் பாலியல் கடத்தலைச் செய்கிறார்கள்," என்று, ' ஆபரேஷன் ப்ரோக்கன் பிளேட்' எனப் பெயரிடப்பட்ட புதன்கிழமை நடந்த அதிரடி நடவடிக்கைக்குப் பிறகு லாஸ் ஏஞ்சல்ஸின் தலைமை வழக்கறிஞர் பில் எஸ்ஸெய்லி விளக்கியுள்ளார்.
அவர்கள் அதை முதலில் வற்புறுத்தலின் மூலமாகவும், பின்னர் வன்முறையின் மூலமாகவும் செய்கிறார்கள் என்று கூறப்படுகிறது. “இது பயங்கரமானது,” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். 1960களின் பிற்பகுதியிலும் 70களின் முற்பகுதியிலும் தோன்றிய ஹூவர் கிரிமினல்ஸ், லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள மிகப்பெரிய மற்றும் மிகவும் சக்திவாய்ந்த சட்டவிரோத கும்பல் ஆகும்.
கிரிப்ஸ் கும்பலிலிருந்து பிரிந்த பிறகு, 80-களில் கிராக் போதைப்பொருள் பரவலின் போது அந்தக் கும்பல் செழித்து வளர்ந்து, போதைப்பொருள் கடத்தல் மற்றும் விபச்சாரம் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் அந்த கும்பல் ஈடுபட்டது. மேலும், அவர்கள் பெண்களையும் இளம் சிறுமிகளையும் நடைபாதைகளில் நடக்க வைத்து வாடிக்கையாளர்களைக் கவரச் செய்து, பின்னர் அவர்களைத் தரமற்ற மோட்டல்களில் ஒப்படைத்து, அங்கு வரவேற்பறையில் ஒரு குறிப்பிட்ட கமிஷனுக்காகப் பாலியல் சேவையை விற்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, "தங்களைப் பாதுகாக்க யாரும் இல்லாத" நபர்களை ஹூவர் கும்பல் தேர்வு செய்வதாகவும், முடிந்தவரை இளம் வயது சிறுமிகளை அவர்கள் குறிவைப்பதாகவும் லாஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறைத் தலைவர் ஜிம் மெக்டொனெல் தெரிவித்துள்ளார்.
பணம், விலையுயர்ந்த ஆடைகள், பாசம் மற்றும் உறங்க ஓர் இடம் ஆகியவற்றைத் தருவதாக வாக்குறுதியளித்து அவர்கள் சிறு குழந்தைகளை மயக்கி இந்த தொழிலுக்குள் இழுப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். பின்னர் அவர்கள் வன்முறை, அச்சுறுத்தல், போதைப்பழக்கம் மற்றும் பயம் ஆகியவற்றின் மூலம் அவர்களைச் சிக்க வைக்கிறார்கள்.
இந்த கொடூர குமபலில் இருந்த ஒருவர் ஒரு பெண்ணை கடித்து அந்தப் பெண்ணுக்கு கன்னத்தில் பயங்கர காயம் ஏற்பட செய்து சிகிச்சை செய்வதற்காக ஒரு பெர்கோசெட் மாத்திரையைக் கொடுத்து அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பியதோடு, காயத்தைப் புகைப்படம் எடுத்து, ஜாரெட் எவன்ஸ் என்ற சக ஹூவர் ரவுடிக்கு அதை குறுஞ்செய்தியாக அனுப்பினார் என நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன.
பாலியல் தரகர்கள் தங்கள் பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களைக் கொண்டு முத்திரை குத்தி, அவர்கள் மீது உளவியல் ரீதியான கட்டுப்பாட்டைச் செலுத்தியதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.
ஹூவர்ஸ் தம்பதியினர் தங்கள் பாதிக்கப்பட்டவர்களை எந்த அளவிற்கு கட்டுப்படுத்தியிருந்தனர் என்றால், கலீத் மௌட்டன் என்றழைக்கப்படும் ஒரு தரகர், தனது பெண்களில் ஒருவரைக் கருக்கலைப்பு செய்யும்படி கட்டாயப்படுத்தியுள்ளார். நீதிமன்ற ஆவணங்களின்படி, "அந்த செயல்முறைக்குப் பிறகு அவருக்கு இரத்தப்போக்கு ஏற்படும் என்று எச்சரித்தும் கருக்கலைப்பு நடந்துள்ளது. மேலும் வேறுஒரு 6 வயது சிறுமிக்கு அந்த சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு, மௌட்டன் அவரை அதே நாளில் பாலியல் தொழிலில் ஈடுபடுமாறு கட்டளையிட்டதாகவும், அவ்வாறு செய்யாவிட்டால் வேலையை விட்டு நீக்கிவிடுவதாக மிரட்டியதாகவும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆபரேஷன் ப்ரோக்கன் பிளேட் நடவடிக்கையின் விளைவாக, லாக்கெட், ஆர்ம்ஸ்டெட் மற்றும் மௌட்டன் உட்பட 25 பாலியல் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும், மேலும் பலர் கைது செய்யப்பட உள்ளதாகவும் எஸ்ஸெய்லி தெரிவித்துள்ளார். "இந்தச் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக 50-க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்டவர்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம், எங்கள் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது," என்று எஸ்ஸெய்லி கூறினார். "நாங்கள் நிறுத்தப் போவதில்லை" என்றும் உறுதியளிக்கப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.