“ஒரு வாட்சப் Status-ஆல் பறிபோன உயிர்” - கணவன் இறந்ததாக போடப்பட்ட கண்ணீர் அஞ்சலி போஸ்டால் விபரீத முடிவெடுத்த மனைவி!

wife suicide
Published on
Updated on
1 min read

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கரும்பியூர் பிள்ளையார் கோவில் பகுதியில் வசித்து வருபவர் பிரவீன் வயது (31). இவருக்கு திருமணமாகி காயத்ரி (24) என்ற மனைவியும், இவர்களுக்கு நான்கரை வயதில் ஒரு ஆண் குழந்தையும், இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. பிரவீன் நாகை மாவட்டத்தில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் இவரது மனைவிக்கும் காலை தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரவீன் வெளியே சென்று உள்ளார்.

வெளியே சென்ற அவர் எலிமருந்தை வாங்கி கொண்டு, மேட்டுப்பாளையம் பகுதியில் மைலி அம்மன் கோவில் அருகே சென்றுள்ளார். எலிமருந்தை சாப்பிட்டு விட்டு சமூக வலைத்தளமான ஹெலோ app மற்றும் அவரது Whatspp ஸ்டேட்டஸில் வைத்து, கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ரெடி செய்து RIP என்று பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த அவரது மனைவி காயத்ரி தனது கணவர் இறந்து விட்டதாக நினைத்துவீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. எலி பேஸ்ட்டை சாப்பிட்டு விட்டு மயக்கம் அடைந்த நிலையில் கோவில் அருகே கிடந்த பிரவீனை அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர். தற்போது திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஆலிவலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில் குடும்ப தகராறு காரணமாக கணவன் இறந்ததாக கண்ணீர் அஞ்சலி போஸ்டரை வாட்சப்பில் பதிவிட்டதை பார்த்த மனைவி அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனால் பதறிப்போன மனைவி காயத்ரி வீட்டிற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத் தகராறில் தனக்குத்தானே சமூக வலைத்தளத்தில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் போட்ட  கணவன். அதை பார்த்து மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட மனைவியின் இறப்பு அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com