வங்கி ஊழியர்கள் கொடுத்த நெருக்கடி!! - தொல்லை தாங்காமல் பூச்சி மருந்து குடித்து விவசாயி தற்கொலை!!!

இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் மற்றும் அவரது உறவினர்கள் அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு ...
farmer commited suicide
farmer commited suicide
Published on
Updated on
1 min read

ஊழியர்களின் மிரட்டலில் பயந்துபோன 70 வயதான விவசாயி, விவசாய நிலத்திலேயே பூச்சி மருந்து குடித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

திருவண்ணாமலை மாவட்டம் தூசி கிராமம் அருகே உள்ளது நத்தக்கொள்ளை கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் விவசாயத்தை நம்பியே பிழைத்து வருகின்றனர். இந்நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜேந்திரன் என்பவர் சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் பகுதியில் உள்ள இரண்டு தனியார் வங்கிகளில் வீட்டு பத்திரங்களை அடகு வைத்து இரண்டு வங்கிகளிலும் சுமார் 22 லட்சம் வரை கடன் பெற்றுள்ளார்.

வாங்கிய கடனுக்கு வட்டியுடன் கூடிய பணத்தை தொடர்ந்து கட்டி வந்துள்ளார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் போதிய வருமானம் இன்றி இருந்த ராஜேந்திரன் கடனை கட்ட முடியாமல் இருந்துள்ளார். கடனை கட்ட தவறிய ராஜேந்திரன் விவசாயி வீட்டிற்கு இரண்டு வங்கிக ஊழியர்கள் சென்று கடன் கட்ட சொல்லி வற்புறுத்தியுள்ளதாக தெரிகிறது.

 இதனால் மனமுடைந்த விவசாயி ராஜேந்திரன் விவசாய நிலத்திற்கே சென்று பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் மற்றும் அவரது உறவினர்கள் அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ராஜேந்திரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

 ராஜேந்திரனின் இளைய மகன் கோபால் சில வருடங்களுக்கு முன்பு ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் அதில் பல லட்சம் இழப்பு ஏற்பட்டதாகவும் தெரிகிறது இதனால் ராஜேந்திரனின் மகன் தனது குடும்பத்தாரிடம் பணத்தை இழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவரது தந்தை ராஜேந்திரன் தனது நிலம் மற்றும் வீடுகளின் பத்திரத்தை வைத்து காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் வங்கிகளில் இரண்டு வருடங்களுக்கு முன்பு சுமார் 22 லட்சம் இரண்டு வங்கிகளில் கடன் வாங்கியுள்ளதாக தெரிகிறது ஊழியர்களும் தொடர்ந்து ராஜேந்திரன் குடும்பத்தினருக்கு கடனை திருப்பி செலுத்துமாறு கட்டாயப்படுத்தியதால் இதனால் மனமுடைந்த ராஜேந்திரன் தனது நிலத்திற்கு சென்று அங்குள்ள பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 உயிரிழந்த ராஜேந்திரன் மறைவுக்கு தனியார் வங்கி ஊழியர்களின் அழுத்தமே காரணம் என்று அவரது உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com